திருப்பதி வனப்பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

திருப்பதி வனப்பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு
Updated on
1 min read

திருப்பதி அருகே செம்மரக் கடத்தல் கும்பலுக்கும், அதிரடிப் படையினருக்கும் இடையே நேற்று மீண்டு மோதல் ஏற்பட்டதால் போலீ ஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் கடத்துவதற்கு தயாராக இருந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

ரேணிகுண்டா மண்டலம் கரகம் பாடி வனப்பகுதியில் நேற்று மதியம் அதிரடிப்படை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந் தனர். அப்போது சுமார் 30 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை கடத்தமுயன்றதைக் கண்டனர். ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடையுமாறு போலீஸார் முதலில் எச்சரித்துள்ளனர்.

ஆனால் கடத்தல் கும்பல் சரணை டைய மறுத்து, போலீஸாரை நோக்கி கற்கள், கோடரி, கத்தியால் தாக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் 2 ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதனால் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி தலைமறைவானது.

இதில் ஒருவரை மட்டும் போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். மேலும் கடத்தப்பட இருந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரங்களை போலீஸார் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த னர். தலைமறைவானவர்களை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in