

பிரான்ஸிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி செலவில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப் பந்தத்தில் கையெழுத்திட்டது.
பிரான்சில் கரோனா வைரஸ் தொற்று இருந்த போதிலும், திட்டமிட்டபடி இந்தியாவுக்கு ரஃபேல் விமானங்கள் வழங்கப் படும் என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் புளோரன்ஸ் கடந்த மாதம் தெரி வித்தார். இந்நிலையில் வரும் 29-ம் தேதிக்குள் முதல் தொகுப் பாக 5 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்து சேரும் என இந்திய விமான படை தெரிவித் துள்ளது. ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் ரஃபேல் விமானங்கள் வந்திறங்க உள்ளன. இந்த வகை விமானங் கள் ரேடாரில் இருந்து தப்பக் கூடியது.
வானில் இருந்து தாக்கக் கூடிய ஏவுகணைகள், 120 கி.மீ. தொலைவில் இருந்தும் இலக்கை குறிபார்த்து தாக்கக் கூடிய ஏவுகணைகள், சுமார் 600 கி.மீ. தூரத்தில் இருந்தாலும் வானில் இருந்தபடி தரையில் உள்ள இலக்குகளை குறிவைத்து தகர்க்கும். - பிடிஐ