Published : 21 Jul 2020 09:18 PM
Last Updated : 21 Jul 2020 09:18 PM

இந்தியாவில் கரோனா பாதிப்பு; குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7.2 லட்சம்

இந்தியாவில் கரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7.2 லட்சத்தைத் தாண்டியது

கோவிட் 19 நோய்க்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிப்பதை உறுதி செய்வதற்கு, நாடு தழுவிய ஆய்வக வசதிகள் விரிவாக்கத்தின் மூலம் மருத்துவப் பரிசோதனைகள் செய்தல் மற்றும் தரநிலைப்படுத்திய சிகிச்சை நடைமுறைகள், சிறந்த கண்காணிப்பு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகிறது..

ஆக்கபூர்வமான, முன்னேற்றகரமான மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான உத்திகள் மேற்கொண்ட காரணத்தால், கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்த கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 24,491 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, இதுவரையில் குணம் அடைந்த கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 7,24,577 ஆக உயர்ந்துள்ளது.

குணம் அடைபவர்களின் அளவு 62.72 சதவீதமாக அதிகரித்துள்ளது.தொற்று நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 2.43 சதவீதம் என்ற நிலையில், தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது.

குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கைக்கு இடையிலான இடைவெளி இப்போது 3,22,048 ஆக உள்ளது. இப்போது 4,02,529 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x