Published : 21 Jul 2020 12:59 PM
Last Updated : 21 Jul 2020 12:59 PM

கேஜ்ரிவால் அரசின் கனவுத்திட்டம்: வீடுகளுக்கு நேரடியாக விநியோகிக்கும் ரேஷன் பொருட்கள் திட்டத்துக்கு ஒப்புதல்

வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதல்வர் ரேஷன் திட்டத்தை கேஜ்ரிவால் அரசு அறிவித்து தற்போது ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் இந்தக் கனவுத் திட்டம் நிறவேறும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் திட்டடத்தை காணொலியில் அறிவித்த கேஜ்ரிவால், வீட்டிற்கே ரேஷன் பொருட்கள் வந்து சேரும், ரேஷன் பொருட்களை ஏழைகள் சுயகவுரவத்துடன் பெற்றுப் பயன்படுத்தலாம் என்று கூறினார். இதன் மூலம் மாநில அரசின் கனவு நனவாகும் என்றார்.

பிரதமரின் ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டமும், தனது வீடு தேடி செல்லும் ரேஷன் பொருட்கள் திட்டமும் ஒரே நாளில் தொடங்கும் என்றார்.

மொத்தம் 2016 ரேஷன் கடைகளில் மூலம் டெல்லியில் லட்சக்கணக்கானோர் பயனடைவார்கள். தற்போது மானிய விலை அரிசி தேசியப் பாதுகாப்பு 2013 சட்டப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதன்பயன் தற்போது நீட்டிக்கப்பட்டு விரிவாக்கம் பெறுகிறது என்கிறார் கேஜ்ரிவால்.

முன்னதாக இந்த நலத்திட்டம் குறித்து மத்திய அரசுக்கும் கேஜ்ரிவால் அரசுக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x