Published : 28 Sep 2015 08:25 AM
Last Updated : 28 Sep 2015 08:25 AM

எம்.பி.க்களின் ஊதியம் குறித்து பரிந்துரை செய்ய 3 உறுப்பினர் குழு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் குறித்து பரிந்துரை செய்ய 3 பேர் கொண்ட ஒரு குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் அனைத்து இந்திய கொறடாக்கள் மாநாடு அடுத்த வாரம் நடைபெற உள்ளது. 2 நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டுக்காக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகம் ஒரு நிகழ்ச்சி நிரலை தயாரித்துள்ளது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் இதர படிகள் குறித்து பரிந்துரை செய்ய ஒரு குழுவை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் மூலம் தங்கள் ஊதியத்தை தாங் களே நிர்ணயித்துக் கொள்கிறார்கள் என்று பொதுமக்களும் ஊடகங் களும் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்காக குழுவை அமைப்பதன் மூலம் பொதுமக்களின் குற்றச் சாட்டிலிருந்து அரசு விடுபட முடியும். அத்துடன், எம்பிக்கள் மத்தியில், ஜனநாயகத்தில் நமக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்ற உணர்வு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்தக் குழு அமைப்பட்டால், எம்.பி.க்களின் ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதிய சட்டத்தில் (1954) திருத்தம் கொண்டுவரப்படும்.

இதற்கு முன்பு கடந்த 2010-ம் ஆண்டு எம்.பி.க்களின் ஊதியம் மாற்றியமைக்கப்பட்டது. இதன்படி, அவர்களின் மாத அடிப்படை ஊதியம் ரூ.50 ஆயிரம் ஆக உள்ளது. இதுதவிர, நாடாளுமன்றம் கூடும் நாட்களில் தினசரி படி ரூ.2,000 வழங்கப்படுகிறது. தொகுதி படியாக மாதம் ரூ.45 ஆயிரம், எழுது பொருள் செலவுக்காக ரூ.15,000, உதவியாளர்களை நியமித்துக் கொள்ள ரூ.30,000 வழங்கப்படு கிறது. மேலும் தங்குமிட வசதி, விமான, ரயில் பயணம், 3 லேண்ட்லைன் தொலைபேசி வசதி, 2 செல்போன் வசதி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.

உலகில் வளர்ந்து வரும், வளரும் 37 நாடுகளில் எம்.பி.க்களின் அடிப்படை ஊதியம் குறைந்தபட்சமாக ரூ.7,952 (துனிசியா) ஆகவும், அதிகபட்சமாக ரூ.6,16,675 (இஸ்ரேல்) ஆகவும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x