Published : 21 Jul 2020 07:17 AM
Last Updated : 21 Jul 2020 07:17 AM

மின்னலை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம்: மத்திய புவி அறிவியல் துறை தகவல்

புதுடெல்லி

நாடு முழுவதும் ஆண்டுதோறும்மின்னல் பாய்ந்து 2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். மின்னலை முன்கூட்டியே கணித்துவிட்டால் இந்த உயிரிழப்புகளை தடுக்க முடியும்.

ஆந்திரா, ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்கள், அமெரிக்காவின் 'எர்த் டாட் நெட்' நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்னலை முன்கூட்டியே கண்டறிந்து வருகின்றன. இந்த தொழில்நுட்பம் மூலம் மின்னல் பயணிக்கும் பாதையை கணித்து இந்த கிராமத்தில் மின்னல் பாதிப்பு இருக்கும் என்பதை 45 நிமிடங்களுக்கு முன்பாக கணிக்க முடிகிறது.

மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் ராஜீவன் அண்மையில் ஒரு கருத்தரங்கில் பேசும்போது, "அடுத்த ஓராண்டுக்குள் மின்னலைமுன்கூட்டியே கண்டுபிடிக்கும்தொழில்நுட்பம் அறிமுகமாகும்.இதுதொடர்பாக இஸ்ரோவுடன் பேசி வருகிறோம். விண்ணில் செலுத்தப்பட உள்ள அடுத்த ஜியோ செயற்கைக்கோளில் மின்னலை முன்கூட்டியே கண்டறியும் சென்சார்கள் பொருத்தப்படும்" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து புனேவில் உள்ள இந்திய புவியியல் ஆய்வு மைய மூத்த விஞ்ஞானி சுனில் பவார் கூறியதாவது:

நாடு முழுவதும் 83 இடங்களில்மின்னலை கண்டறியும் சென்சார்களை அமைத்துள்ளோம். இதன்மூலம் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக மின்னல் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய முடியும்.

செயற்கைக்கோளில் பொருத்தப்படும் சென்சார்கள் மூலம் மின்னல் பயணிக்கும் பாதையை கணித்தால் எந்த கிராமத்தில் எப்போது இடி, மின்னல் பாதிப்பு இருக்கும் என்பதை 3 மணி நேரத்துக்கு முன்பாகவே துல்லியமாக கணக்கிட முடியும். அப்பகுதி மக்களுக்கு செல்போன் குறுஞ்செய்தி அல்லது இதர ஊடகங்கள் வாயிலாக உடனடியாக எச்சரிக்கை செய்ய முடியும். உயிரிழப்புகளை தடுக்க முடியும்.

விவசாயிகள், பொதுமக்களின் நலன் கருதி ஏற்கெனவே தாமினிஎன்ற செயலியை அறிமுகம் செய்துள்ளோம். இவ்வாறு விஞ்ஞானி சுனில் பவார்தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x