Published : 19 Jul 2020 06:36 AM
Last Updated : 19 Jul 2020 06:36 AM

சச்சின் பைலட் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் எங்கே?- தேடுதல் வேட்டையில் ராஜஸ்தான் போலீஸார்

காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் தங்கியிருந்த ஹரியாணாவில் உள்ள மானேசர் ஓட்டலில் ராஜஸ்தான் போலீஸார் நேற்று சென்று சோதனை நடத்தினர்.

மானேசர்

சச்சின் லைட் அணி எம்எல்ஏ.க்களை ராஜஸ்தான் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் போர்க் கொடி உயர்த்தியுள்ளார். அவரது ஆதரவு எம்எல்ஏ.க்கள் டெல்லி அருகேயுள்ள மானேசரில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தனர்.

கெலாட் ஆட்சியை கவிழ்ப் பது தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், சச்சின் அணி எம்எல்ஏ பன்வார்லால் சர்மா மற்றும் சஞ்சய் ஜெயின் ஆகியோர் பேசியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியானது. இதுதொடர் பாக அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகா வத் உள்ளிட்ட 3 பேர் மீதும் ராஜஸ் தான் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் சஞ்சய் ஜெயின் கைது செய்யப்பட்டார்.

பாஜக ஆட்சி நடைபெறும் ஹரியா ணாவின், மானேசர் நகர ஓட்டலில் தங்கியிருந்த பன்வார்லால் சர்மா எம்எல்ஏ.வை தேடி ராஜஸ்தான் போலீஸார் நேற்று அங்கு சென்ற னர். அங்கு அவர் உட்பட சச்சின் அணி எம்எல்ஏ.க்கள் யாரும் இல்லை. ஓட்டலில் 17 எம்எல்ஏ.க்கள் தங்கி யிருந்ததாகவும் ஓட்டலின் ரகசிய வாசல் வழியாக அவர்கள் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சச்சின் லைட் அணி எம்எல்ஏ.க்களை ராஜஸ் தான் போலீஸார், மானேசர் முழு வதும் ஓட்டல் ஓட்டலாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் கூறும்போது, ‘‘சச்சின் அணி எம்எல்ஏ.க்களை தேடி சென்ற ராஜஸ்தான் போலீஸாரை, ஹரியாணா போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஓட்டலில் ரகசிய கதவு வழியாக எம்எல்ஏ.க்கள் தப்பிச் சென் றுள்ளனர். அதன்பிறகே ஓட்டலுக்குள் நுழைய ராஜஸ்தான் போலீஸார் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’’ என்று குற்றம் சாட்டினார்.

ராஜஸ்தான் அமைச்சர் ரகு சர்மா கூறும்போது, "19 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களும் பாஜக பிடியில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

சிபிஐ விசாரணை

பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பித் பத்ரா நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:

முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் கட்சியிடம் நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்பு கிறோம். மாநிலத்தில் அரசியல்வாதி களின் போன் ஒட்டு கேட்கப்படு கிறதா? அதற்கான விதிமுறைகள் ராஜஸ்தான் மாநில அரசால் பின்பற்றப்படுகிறதா? மாநிலத்தில் தாங்கள் ஓரங்கட்டப்பட்டோம் என் பதை உணர்ந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்கள், தங்களை காப்பாற்றி கொள்ள சட்ட விரோதமான வழிகளை கையாள்கின்றனரா?

அரசியல் தலைவர்களின் போன் ஒட்டு கேட்கப்படுகிறதா என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும்.

அரசியல்வாதிகளின் போன் களை ஒட்டுக் கேட்பது அரசியல மைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. இதுகுறித்து மாநில அரசு உடனடி யாக பதிலளிப்பதுடன், இந்த விவ காரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியதாக வெளியிட்ட ஆடியோ உண்மையானது என்று முதல்வர் அசோக் கெலாட் கூறு கிறார். ஆனால் அது உண்மை யானது அல்ல. போலியாகத் தயாரிக் கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x