தேசிய பேரிடர் மீட்பு நிதிக்கு தனிநபர் அல்லது நிறுவனத்திடமிருந்து நன்கொடைகள் பெற மத்திய அரசு அனுமதி

தேசிய பேரிடர் மீட்பு நிதிக்கு தனிநபர் அல்லது நிறுவனத்திடமிருந்து நன்கொடைகள் பெற மத்திய அரசு அனுமதி
Updated on
1 min read

தேசிய பேரிடர் மீட்பு நிதிக்கு (என்டிஆர்எப்) தனிநபர் அல்லது நிறுவனத்திடமிருந்து நன்கொடைகள் பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

எந்த ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்திடமிருந்து, பேரிடர் மேலாண்மைக்காக, தேசியப் பேரிடர் மீட்பு நிதிக்கு தொகை, மானியங்களை பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-இன் பிரிவு 46(1) (b)_இன் படி, பெறுவதற்கான விதிமுறைகளை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தனிநபர் அல்லது நிறுவனங்கள் பின்வரும் வழிமுறைகளின் படி பங்களிப்பை நன்கொடைகளை வழங்கலாம்;

a. பொருளியல் வழிமுறை மூலம்; ‘’பிஏஓ (செயலகம்), மத்திய உள்துறை அமைச்சகம்’’ என்ற பெயரில் புதுதில்லியில் பெறத்தக்க வகையில் அனுப்ப வேண்டும். அனுப்பும் ஆவணத்தின் பின்புறத்தில் “என்டிஆர்எப்-க்கு பங்களிப்பு/நன்கொடை’’ என்று தனிநபர்கள் குறிப்பிடலாம்.

b. ஆர்டிஜிஎஸ்/நெப்ட்/ யுபிஐ மூலம்; நன்கொடைகளை ஆர்டிஜிஎஸ்/நெப்ட் மூலமாகவும் அனுப்பலாம். “என்டிஆர்எப்-க்கு பங்களிப்பு/நன்கொடை’’ என்று குறிப்பிட வேண்டும். அதனை கணக்கு எண். 10314382194, ஐஎப்எஸ்சி கோட் - SBIN0000625, பாரத ஸ்டேட் வங்கி, சென்ட்ரல் செக்ட் கிளை, புதுதில்லி, என்பதில் டெபாசிட் செய்ய வேண்டும்.

c. Bharatkosh portal https ://bharatkosh.gov.in மூலம்; நெட் பாங்கிங்-ஐ பயன்படுத்தி, டெபிட் அட்டைகள், கிரெடிட் அட்டைகள், யுபிஐ மூலம் பின்வரும் வழிமுறைகளில் அனுப்பலாம்;

i. முகப்புப் பக்கத்தில் ‘’குயிக் பேமண்ட் ‘’ என்ற ஆப்சனில் https://bharatkosh.gov.in என்பதை கிளிக் செய்யவும்.

ii. அடுத்த பக்கத்தில், அமைச்சகத்தை “உள்துறை’’ என்பதை தேர்வு செய்யவும். நோக்கத்தில் “என்டிஆர்எப்-க்கு

பங்களிப்பு/நன்கொடை’’ என்று குறிப்பிடவும். பணம் செலுத்த வலைதளம் மேலும் வழிகாட்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in