அனைத்து வன்முறைகளும் ஆண்களால்தான் முடுக்கப்படுகிறது: மேனகா காந்தி

அனைத்து வன்முறைகளும் ஆண்களால்தான் முடுக்கப்படுகிறது: மேனகா காந்தி
Updated on
1 min read

நாட்டில் நடக்கும் அனைத்து வன்முறைச் சம்பவங்களிலும் ஆண்களின் பங்கு இன்றியமையாத இருப்பதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கூறினார்.

தங்களது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய 100 பெண்களை நாடெங்கிலும் தேர்ந்தெடுத்து அவர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமைச்சகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் இணையவாசிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று (திங்கள்கிழமை) நடந்தது. அப்போது கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மேனகா காந்தி, "நாட்டில் நடக்கும் அனைத்து வன்முறைச் சம்பவங்களுக்கும் ஆண்களே காரணமாக இருக்கின்றனர்.

இதனைத் தடுக்க பாலின சமநிலையை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் இதனை ஆரம்பிக்க வேண்டும். பெண்களை மதிக்கும் ஆண் பிள்ளைகளை நாம் கவுரவிக்க வேண்டும். அவர்களுக்கு ஊக்கம் அளித்து அவர்களுள் சமநிலையை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in