

ஜிசாட்-6 செயற்கைக்கோள் புவிவட்டப் பாதையில் நேற்று வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி-டி6 ராக்கெட் மூலம் ஜிசாட்-6 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
முதலில் தற்காலிக சுற்றுப் பாதையில் நிறுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள் நேற்று நிலையான புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
தகவல்தொழில்நுட்ப பயன்பாட்டுக்காக ரூ.250 கோடியில் உருவாக்கப்பட்ட ஜிசாட்-6 செயற்கைக்கோள் 2117 எடை கொண்டதாகும். இதில் அதிநவீன ஆன்டனா பொருத்தப்பட்டுள்ளதால் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் தொலைத்தொடர்பு வசதியை அளிக்க முடியும். குறிப்பாக பாதுகாப்புத் துறைக்கு ஜிசாட்-6 செயற்கைக்கோள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.