தெலங்கானா என்கவுன்ட்டர் சம்பவம் 1,365 பிரமாண பத்திரங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

தெலங்கானா என்கவுன்ட்டர் சம்பவம் 1,365 பிரமாண பத்திரங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
Updated on
1 min read

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கால்நடை பெண் மருத்துவரை 4 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றது. இந்த வழக்கில் கைதான 4 பேரும்என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இதற்கு பரவலாக வரவேற்பு இருந்த நிலையில், மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். என்கவுன்ட்டர் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது. என்கவுன்ட்டர் தொடர்பாக இக்குழுவிடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விசாரணைக்குழுவிடம் என்கவுன்ட்டர் தொடர்பாக 1,365 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.என்கவுன்ட்டரில் இறந்த 3 பேரின் குடும்பத்தினர் மார்ச் 5-ம் தேதியும் என்கவுன்ட்டரில் தொடர்புடைய போலீஸார் ஜூன் 15-ம் தேதியும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ததாகவும் விசாரணைக் குழு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் மாநில அரசின் சார்பில் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மாநில அரசு சார்பிலும் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in