

சுய சார்பு பாரதத்தை உருவாக்க புதுமையான தீர்வுகளைக் கொண்டு வருமாறு தொழில்முனைவோரை தர்மேந்திர பிரதான் கேட்டுக்கொண்டார்.
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று, புதுமைகளைப் புகுத்தக் காத்திருக்கும் தொழில் முனைவோர் உணர்வைக் கொண்டாடும் தொழில் முனைவோர் திருவிழாவில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றிய போது, இளம் தொழில்முனைவோருக்கு அவர்களின் யோசனைகளை வளர்ப்பதற்கும் அவற்றை சாத்தியமான தொடக்க நிலைகளாக மாற்றுவதற்கும் ஒரு தளத்தை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்க முயற்சிக்கிறது என்று தெரிவித்தார்.
பங்கேற்பாளர்களிடையே உரையாற்றிய அமைச்சர் பிரதான், பிரதமர் நரேந்திர மோடியின் சுயசார்பு பாரதத்தை பற்றிய பார்வை, கோவிட் -19 நெருக்கடி நிலையால் உருவாகியுள்ள சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவதில் இளம் தொழில்முனைவோரின் பங்கு, தன்னம்பிக்கை மற்றும் உலகளாவிய நன்மைகளை அடைதல், உலகம் முழுவதும் ஒரு குடும்பம் என்ற மனநிலையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த இளம் கண்டுபிடிப்பாளர்களைச் சுற்றியுள்ள சமூக மற்றும் பொருளாதார சவால்களை அடையாளம் காணவும், ஒரு வளமான சுயசார்பு பாரதத்திற்கான புதுமை, வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் அடுத்த பாதையில் இந்தியாவை நகர்த்துவதற்கான புதுமையான தீர்வுகளைக் கொண்டு வரவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். பொருள் ஈட்டுவதற்கான பாதையை உருவாக்குவதோடு சமூக நன்மையையும் அடைவதே தொழில்முனைவோரின் உண்மையான நோக்கமாக இருக்க வேண்டுமென்று தொழில்முனைவோரை அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் பொருளாதாரத்தில் எளிதில் அணுகக்கூடிய, நிலையான மற்றும் உலகிற்கு நன்மை பயக்கும் ஒரு மாதிரியை உருவாக்குவதன் மூலம் வெவ்வேறு நோக்கங்களை சமநிலைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
புதுமைகளைப் புகுத்தக் காத்திருக்கும் தொழில்முனைவோருக்கான செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதுடன், உள்நாட்டில் அனைத்து மட்டங்களிலும் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதற்கும் இந்திய அரசு உறுதியுடன் இருப்பதை பிரதான் சுட்டிக் காட்டினார்.