

கரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வந்த 37.61 லட்சம் பேர் உத்தரபிரதேசம் திரும்பினர். இவர்கள்அனைவரும் தினக்கூலி தொழிலாளர்கள் என்று நினைத்தால் அது தவறு. இதில், ஊட்டச்சத்து நிபுணர்கள், நிதி ஆலோசகர்கள், வருமான வரி ஆலோசகர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள், யோகா ஆசிரியர்கள், ஐ.டி.பொறியாளர்கள் உள்ளிட்ட திறமையானவர்களும் கணிசமான அளவில் உள்ளனர்.
முன்னதாக, வெளி மாநிலங்களிலிருந்து திரும்பியவர்களுக்கு உள்ளூரிலேயே வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். இதற்காக மாநில வருவாய் துறை அவர்களை வேலை அடிப்படையில் வகைப்படுத்தி உள்ளது. இதில் திறமையான தொழிலாளர்கள் 20.37 லட்சம் பேர் ஆவர். இவர்கள் திறமையின் அடிப்படையில் 93 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். தனித்திறமையற்ற தொழிலாளர்கள் 15 லட்சம் பேர் ஆவர். மற்ற2 லட்சம் பேரின் விவரம் தெரியவில்லை. புலம்பெயர்ந்தவர்களில் 3.18 லட்சம் பேர் பெண்கள். 15 முதல்18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 1.63 லட்சம் பேர் ஆவர்.