Published : 16 Jul 2020 06:17 PM
Last Updated : 16 Jul 2020 06:17 PM

கரோனா பரவலை கட்டுப்படுத்த கபசுர குடிநீர்; ஆயுஷ் அமைச்சகம்

கோவிட்-19 தொற்றுப்பரவல் வீதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தனிநபர் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சுய பாதுகாப்பு நடைமுறைகளை மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி மற்றும் யுனானி மருத்துவ முறைகளை, தடுப்பு நடவடிக்கைகளாகப் பின்பற்றுமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் ஆயுஷ் அமைச்சகம் ஆலோசனை கூறியுள்ளது.

ஆரோக்கிய பானமான கபசுரக் குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதையும் தடுக்கும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

முழுப் பயறு வகைகள், அந்தந்த காலத்தில் விளையும் காய்கறிகள் போன்ற எளிதில் செரிமானம் ஆகக் கூடிய புதிய உணவுப் பொருள்களை உட்கொள்ளுமாறு மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. துளசி இலை, இஞ்சிச்சாறு மற்றும் மஞ்சள் கலந்து கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீரை, அடிக்கடி பருகுவதும் பயனளிக்கும். சிறிதளவு மிளகுத்தூளுடன் தேன் கலந்து உட்கொண்டால், இருமலைக் கட்டுப்படுத்தும். தகுதிவாய்ந்த யோகா பயிற்சியாளர் அறிவுரைப்படி, யோகாசனம் மற்றும் பிராணயாமா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுமாறும் பரிந்துரைக்கப்படுகிறது. நோய் வந்தபிறகு சிகிச்சையளிப்பதை விட தடுப்பு மருத்துவ முறையான வருமுன் காப்போம் அவசியம். 2-வது தளர்வு காலத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருப்பது, கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க உதவும். தளர்வுகளை, தொற்று பரவும் வகையில் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்பதோடு, ஆரோக்கியமாகவும் இருப்பதுதான், தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான சிறந்த நடைமுறையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x