கரோனா பரவும் என அச்சம்: இறந்தவர் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது மக்கள் கல்வீச்சு- கர்நாடகாவில் அவலம்

பிரதிநிதித்துவ படம்.
பிரதிநிதித்துவ படம்.
Updated on
1 min read

கர்நாடகா மாநிலம் பங்கார்பேட்டில் இறந்த 57 வயது கரோனா நோயாளியை ஆம்புலன்ஸில் கொண்டு சென்ற போது உள்ளூர் மக்கள் சிலர் கரோனா பரவும் என்ற அச்சத்தில் தங்கள் தெரு வழியே ஆம்புலன்சை செல்லவிடாமல் மறியலில் ஈடுபட்டதோடு ஆம்புலன்ஸ் மீது கல்வீச்சுத் தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரோனாவினால் பலியான 57 வயது நபரின் உடலை இடுகாட்டுக்கு நகராட்சி ஊழியர்கள் கொண்டு சென்ற போது இந்தச் சம்பவம் நடந்தது. மக்களிடம் ஊழியர்கள் கவனமாக கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்தே புதைப்போம் என்று வாக்குறுதி அளித்தும் கும்பல் கலையாததால் போலீஸார் சிறு தடியடி நடத்தி கலைக்க வேண்டியதாயிற்று.

கங்காமனப்பால்யா மற்றும் குமபரபால்யா ஆகிய இரண்டு பகுதிகளை சேர்ந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர், வைரஸ் தங்களுக்கும் பரவி விடும் என்று அறியாமையில் அச்சம் கொண்டனர். ஆம்புலன்ஸ் தங்கள் தெருக்கள் வழியே செல்லக் கூடாது என்று தடுப்புகளையும் ஏற்படுத்தினர்.

அவர்கள் எவ்வளவு சொல்லியும் அடங்க மறுத்ததால் போலீஸார் லத்திசார்ஜ் செய்தனர்.

கொல்கத்தாவிலும் தாபா எரியூட்டு மயானத்தில் சுமார் 1000 பேர் சூழ்ந்து கொண்டு கோவிட்-19 நோயில் பலியானவர் உடலை எரிக்கவிடாமல் தடுத்தனர்.

இன்னொரு சம்பவத்தில் மும்பையில் வயதான முஸ்லிம் நபர் ஒருவர் கரோனாவுக்குப் பலியாக அவர் உடலையும் புதைக்க விடாமல் தடுத்தனர். கடைசியில் இந்து எரியூட்டு மயானத்தில் அவர் உடல் எரிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in