Published : 16 Jul 2020 09:35 AM
Last Updated : 16 Jul 2020 09:35 AM

தொழில் திறன் என்பது யாரும் கொள்ளையடித்து விட முடியாத பொக்கிஷம்: தொழில் திறன் தினத்தில் பிரதமர் மோடி பேச்சு

உலக இளைஞர் தொழில் திறன்கள் தினம் ஜூலை 15ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பேசியுள்ளார்.

பிரதமர் மோடி பேசியதாவது:

இளைஞர்களின் மகத்தான சக்தி அல்லது 21வது நூற்றாண்டு தலைமுறையினரின் மகத்தான சக்தி என்பது அவர்களுடைய தொழில் திறன்களும், திறன்களைப் பெறுவதற்கான திறமையும் தான்.

இந்த நாள் உங்கள் திறன்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாள். இளைஞர்களின் மகத்தான சக்தி அல்லது 21வது நூற்றாண்டு தலைமுறையினரின் மகத்தான சக்தி என்பது அவர்களுடைய தொழில் திறன்களும், திறன்களைப் பெறுவதற்கான திறமையும் தான்.

இந்த கொரோனா நெருக்கடியானது வேலையின் இயல்பையும், உலக கலாச்சாரத்தையும் மாற்றிவிட்டது. எப்போதும் மாறிக் கொண்டே இருக்கக் கூடிய புதிய தொழில்நுட்பமும் இதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய பணி கலாச்சாரம் மற்றும் வேலையின் புதிய இயல்பைப் பார்க்கும்போது, நமது இளைஞர்கள் புதிய தொழில் திறன்களை அதிக அளவில் கற்று வருகின்றனர்.

நல்லது நண்பர்களே, இன்றைய காலகட்டத்தில் தொழில்களும், சந்தைகளும் வேகமாக மாறிவரும் நிலையில், தங்களுடைய தேவையைத் தக்கவைத்துக் கொள்வதைப் புரிந்து கொள்ள முடிவதில்லையே என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். இந்தக் கொரோனா நெருக்கடி நேரத்தில், இந்தக் கேள்வி மிகவும் இன்னும் முக்கியமானதாக உள்ளது.

இந்தக் கேள்விக்கு நான் எப்போதும் ஒரு பதிலை அளிப்பது வழக்கம். தேவைப்படும் நபராக இருப்பதற்கான மந்திரம் என்னவென்றால் - தொழில்திறன், மறுதிறனாக்கல் மற்றும் கூடுதல் திறனாக்கல் என்பது தான். தொழில்திறன் என்பது நீங்கள் புதிய ஒரு நுட்பத்தைக் கற்றுக் கொள்வதாகும். உதாரணமாக, மரக் கட்டைகளைக் கொண்டு நாற்காலி செய்வதற்கு நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். அது

உங்களுடைய திறன். அந்த மரக்கட்டையின் மதிப்பை இப்போது நீங்கள் உயர்த்தி இருக்கிறீர்கள்; மதிப்புக் கூட்டுதல் செய்திருக்கிறீர்கள். ஆனால், இந்த மதிப்பை தொடர்ந்து பராமரிப்பதற்கு, தினமும் புதிதாக எதையாவது சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது புதிய ஸ்டைல் அல்லது புதிய வடிவமைப்பு என்பவை போன்ற அம்சங்களைச் சேர்க்க வேண்டும். ஒரே விஷயத்தைச் செய்வதில் புதிய நுட்பங்களை தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். புதிதாக சிலவற்றைக் கற்பது என்பது தான் மறுதிறனாக்கல் எனப்படுகிறது. அந்தத் திறனை இன்னும் மேன்மைப்படுத்திக் கொள்வது கூடுதல் திறனாக்கல் எனப்படுகிறது. அதுபோல, சிறிய மரச் சாமான் தயாரிப்பதில் தொடங்கி, நீங்கள் அலுவலகத்துக்கான பொருள்கள் அனைத்தையும் உருவாக்கத் தொடங்கினால், அது கூடுதல் திறனாக்கல் ஆகிறது.

அறிந்து வைத்திருத்தல், புரிந்து கொள்தல், - தொழில்திறன், மறுதிறனாக்கல் மற்றும் கூடுதல் திறனாக்கல் என்ற இந்த மந்திரத்தைப் பின்பற்றுவது உங்கள் அனைவரின் வாழ்விலும் மிகவும் முக்கியமானது.

சொல்லப் போனால், தொழில்திறன் பற்றி நான் பேசும் போது, எனக்கு நேரடியாகத் தெரியாவிட்டாலும், எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் கூறும் நபர் எப்போதும் நினைவுக்கு வருவார். அவர் அவ்வளவாக கல்வி கற்றவர் கிடையாது. ஆனால் அவருடைய கையெழுத்து அருமையாக இருக்கும். காலப்போக்கில், தன் கையெழுத்தில் புதிய ஸ்டைல்களை அவர் சேர்த்துக் கொண்டார். அதாவது தன்னைத் தானே மறு திறனாக்கல் செய்து மெருகூட்டிக் கொண்டார். இந்தத் திறன்களுக்காக மக்கள் அவரை நாடத் தொடங்கினர். விசேஷங்களுக்கு அழைப்பிதழ் அட்டைகளை எழுத்தித் தருமாறு அவரை மக்கள் கேட்டுக் கொள்வார்கள். பிறகு அவர் மறுதிறனாக்கல் மற்றும் கூடுதல் திறனாக்கல் செய்தார். வேறு சில மொழிகளையும் கற்றுக் கொண்டு, மற்ற பல மொழிகளிலும் அவர் எழுதத் தொடங்கினார். அந்த வகையில், காலப்போக்கில் அவருடைய தொழில் வளர்ச்சி அடைந்தது. தங்களது வேலைகளை செய்து கொள்வதற்காக, மக்கள் அடிக்கடி அவரை நாடி வரத் தொடங்கினர். பொழுது போக்காக தொடங்கிய ஒரு திறன், வாழ்வாதாரம் மற்றும் மரியாதையை பெற்றுத் தரும் விஷயமாக மாறிவிட்டது.

பிறருக்கு நாம் பரிசாக அளிப்பது தான் திறன். அனுபவத்துடன் சேர்ந்து திறன் வளர்கிறது. அதற்கு கால வரம்பு கிடையாது; காலம் போகப் போக அது செம்மை பெறும். தொழில் திறன் என்பது தனித்துவமானது; மற்றவர்களிடம் இருந்து உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதாக அது உள்ளது. யாரும் கொள்ளையடித்துவிட முடியாத பொக்கிஷம் அது. மேலும், தொழில்திறன் என்பது தற்சார்பை அளிக்கக் கூடியது; வேலை கிடைக்கும் வாய்ப்பை அது உருவாக்குவதுடன் மட்டுமின்றி, சுயவேலை செய்ய வைப்பதாகவும் இருக்கிறது. திறனின் இந்த சக்தி ஒருவரை மகத்தான உயரங்களுக்கு கொண்டு செல்ல முடியும்.

என்று பேசினார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x