ஆந்திராவில் மாவட்டங்களை அதிகரிக்க முடிவு: அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

ஆந்திராவில் மாவட்டங்களை அதிகரிக்க முடிவு: அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமராவதியில் நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்து. அதன் பின்னர் இதில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் குறித்து அமைச்சர் பேர்னி நானி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பின் தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுப்பை சேர்ந்த 45 வயதை கடந்த பெண்களின் மேம்பாட்டிற்கு ஆண்டிற்கு தலா ரூ. 15 ஆயிரம் வீதம் மீதமுள்ள 4 ஆண்டுகளுக்கு 60 ஆயிரம் வீதம் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஒய்.எஸ்.ஆர். செய்யூத திட்டத்தின் கீழ் 25 லட்சம் பெண்கள் பயனடைவர். பள்ளிக்கல்வி திட்டத்திற்கு கூடுதலாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. தற்போது ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்கள் உள்ளன. தேர்தல் வாக்குறுதியின்படி, நாடாளுமன்ற தொகுதி ஒவ்வொன்றும் ஒரு மாவட்டமாக உருவாக்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 25 முதல் 26 மாவட்டங்களாக பிரிக்கப்படும். இதற்கென ஒரு குழுவை நியமனம் செய்ய அரசு தீர்மானித்துள்ளது. இந்தக் குழு மாவட்டங்களை பூகோள ரீதியாக எப்படி பிரிக்கலாம் என ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்யும். இவ்வாறு அமைச்சர் நானி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in