ஆந்திராவில் குறைகேட்க சென்ற மத்திய அமைச்சரை முற்றுகையிட்ட விவசாயிகள்

ஆந்திராவில் குறைகேட்க சென்ற மத்திய அமைச்சரை முற்றுகையிட்ட விவசாயிகள்
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்தில் நேற்று புகையிலை விவசாயிகளின் குறைகளை கேட்க வந்த, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் காரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு உருவானது.

ஆந்திர மாநிலத்தில் புகை யிலை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடன் தொல்லை யால் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு முறையிட்டார். இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று புகையிலை அதிகமாக பயிரிடப்படும் பிரகாசம் மாவட்டம், ஓங்கோலுக்கு வந்தார்.

அப்போது அவரது காரை விவசாயிகள் மறித்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். “உங்கள் பிரச்சினைகளை தீர்க்கத்தான் இங்கு வந்துள்ளேன்” என்று அமைச்சர் கூறியவுடன் விவசாயி கள் சமாதானம் அடைந்தனர். இதையடுத்து புகையிலை ஏலக்கிடங்கில் அதிகாரிகள் மற்றும் மாநில அமைச்சர்களுடனும் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், தற்கொலை செய்துகொண்ட 2 விவசாயிகளின் குடும்பத்தினரை நிர்மலா சந்தித்து ஆறுதல் கூறினார். இன்று சனிக்கிழமை, விஜயவாடாவில் முதல்வர் சந்திரபாபுவுடன் அவர் ஆலோசனை நடத்தி புகையிலை குறித்த விலை நிர்ணயம் செய்வார் எனவும், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு உதவித் தொகை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in