Last Updated : 08 Sep, 2015 09:14 AM

 

Published : 08 Sep 2015 09:14 AM
Last Updated : 08 Sep 2015 09:14 AM

சர்வதேச இந்தி மாநாட்டில் 2 தமிழர்களுக்கு விருது: பிரதமர் நரேந்திர மோடி 10-ம் தேதி வழங்குகிறார்

மத்தியப்பிரதேசத்தில் வரும் 10-ம் தேதி தொடங்கும் சர்வதேச இந்தி மாநாட்டில் விருது வழங்கி சிறப் பிக்க இரு தமிழர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதை பிரதமர் நரேந்திர மோடி வழங்கவுள்ளார்.

பத்தாவது சர்வதேச இந்தி மாநாடு, மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. பாஜக ஆளும் மாநிலத்தில் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதில் இந்தி மொழிக் காக பாடுபட்ட அறிஞர்களை பாராட்டி ’விஷ்வ இந்தி சம்மான் (உலக இந்தி விருது)’ எனும் விருது வழங்கப்பட உள்ளது.

இதற்காக மத்திய அரசால் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள இந்தி மொழி அறிஞர்களில், தமிழகத்தில் இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் ந.சுந்தரம், மது தவண் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதற்கான தகவல் இவ்விருவருக்கும் மத்திய சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.

இதில் ந.சுந்தரம், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் இந்தி மொழித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தேவாரம், திருவாசகம் உட்பட பல்வேறு முக்கிய தமிழ் நூல்களை இந்தியில் மொழி பெயர்த்தவர்.

மற்றொரு அறிஞரான மது தவண், சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியின் இந்தி மொழித்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு இந்தி அகாடமியை நிறுவி இந்தி மொழிக்கு பணியாற்றி வருகிறார். கவிஞர், நாவல் ஆசிரியராகவும் இந்தி மொழிக்கு மது தவண் சிறப்பு செய்கிறார்.

தமிழ் செம்மொழி ஆய்வு நிறு வனத்துகாக சங்க கால இலக் கியங்களை உ.பி.யின் அலகா பாத்தில் உள்ள பாஷா சங்கம் இந்தியில் மொழிபெயர்த்தது. இந்த மொழிபெயர்ப்பு பணியில் இந்த இருவரும் பணியாற்றியுள்ளனர்.

விருது தகவலை தொடர்ந்து ந.சுந்தரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இந்தி மொழிக்கு பெருமை சேர்க்கும் இந்த விருதின் மூலம் நம் நாட்டில் ஒற்றுமை வளரும். தமிழை போல் மற்ற மொழிகளின் இலக்கியங்களும் இந்தியில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். இந்தியானது, அதை பேசும் மக்களுக்கானது மட்டுமல்ல, இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது. இந்திமொழி மூலமாக இந்தியாவின் அனைத்து மொழிகளும் வளரும்” என்றார்.

இந்தி மொழியை உலக அளவில் வளர்ப்பதற்காக, இந்த மாநாட்டை மத்திய வெளியுறவு அமைச்சகம் நடத்துகிறது. இம்மாநாட்டில் உலகின் 27 நாடுகளில் இருந்து சுமார் 20,000 பேர் பங்கேற்ற உள்ளனர். இம்முறை இந்த மாநாட்டை வெளியுறவு அமைச்சகத்துடன் மத்தியப் பிரதேச அரசு இணைந்து நடத்துகிறது.

இதில் சிறப்பு அழைப்பாளர் களாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x