Published : 15 Jul 2020 05:24 PM
Last Updated : 15 Jul 2020 05:24 PM

கடந்த 24 மணி நேரத்தில் 3,20,161 மாதிரிகள் பரிசோதனை- ஐசிஎம்ஆர் தகவல் - நாளொன்றுக்கு 10 லட்சம் பேருக்கு 140 பரிசோதனைகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

கடந்த 24 மணி நேரத்தில் 3,20,161 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஏற்கனவே 140-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்படுகின்றன.

“கோவிட்-19-ஐ கருத்தில் கொண்டு பொது சுகாதாரம் மற்றும் சமுதாய நடவடிக்கைகளுக்கு ஏற்ப பொது சுகாதார அளவுகோலை சரி செய்தல்” என்ற தலைப்பிலான நெறிமுறை அறிவிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் கோவிட்-19 தொற்றைக் கண்காணிப்பது மற்றும் பரிசோதிப்பது தொடர்பாக விளக்கும் போது, 10 லட்சம் மக்கள் தொகைக்கு நாளொன்றுக்கு 140 பரிசோதனைகளை, ஒரு நாடு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் மத்திய அரசு மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், நம் நாட்டில் உள்ள 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், நாளொன்றுக்கு 10 லட்சம் மக்கள் தொகைக்கு 140க்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள எண்ணிக்கைக்கும் அதிகமான பரிசோதனைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் மருத்துவப் பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், கோவிட்-19 பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அரசு ஆய்வகங்கள் 865, தனியார் ஆய்வகங்கள் 358 என மொத்த ஆய்வகங்களின் எண்ணிக்கை 1223 ஆக உயர்ந்துள்ளது. இதன் விவரங்கள்:

· உடனடி RT PCR அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 633 (அரசு: 391 + தனியார்: 242)

· TrueNat அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 491 (அரசு: 439 + தனியார்: 52)

· CBNAAT அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 99 (அரசு: 35 + தனியார்: 64)

இந்தியாவில் உள்ள ஆய்வகங்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு ஆய்வகமாக இருந்தது, மார்ச் மாதத்தில் 121 ஆக அதிகரித்து, இன்று 1223 ஆகக் கூடியுள்ளது.

நாள்தோறும் நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,20,161 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் மொத்தம் 1,24,12,664 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஜூலை 14, 2020 அன்று நிலவரப்படி ஒரு நாளில் மட்டும் 3.2 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கோவிட்-19 குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களையும், கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்கள், வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள...பாருங்கள்: https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA இணையதளங்களை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x