

ஹைதராபாதில் நேற்று, தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் சென்ற பைக், தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக் குள்ளானது. இதில்மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம், ஆதிலா பாத் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபுதேவ், வெங்கடேஷ், சுரேஷ் ஆகிய மூவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சிறுவயது நண்பர் களான இவர்கள் மூவரும் ஹைதரா பாத் குஷாய்கூடா பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலையில் இவர்கள் பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, முலாலி பகுதியில் சாலையின் குறுக்கே இருந்த தடுப்புச் சுவர் மீது இவர்களின் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து மூலாலி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.