தீவிரவாத செயல்களுக்காக கேரளாவில் தங்கம் கடத்தல்: என்ஐஏ திடுக்கிடும் தகவல்

தீவிரவாத செயல்களுக்காக கேரளாவில் தங்கம் கடத்தல்: என்ஐஏ திடுக்கிடும் தகவல்
Updated on
1 min read

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்துதிருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டு தூதரகத்துக்கு சரித் என்பவர் பெயரில் விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் கடந்த 5-ம் தேதி கைப்பற்றினர்.

இதுதொடர்பாக சரித் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய ஸ்வப்னாசுரேஷ், தூதரக முன்னாள் அதிகாரி சந்தீப் நாயர் ஆகியோரை பெங்களூருவில் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்கிறது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் 7 நாள் என்ஐஏ காவலில் விசாரிக்க நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி அளித்தது.

சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “இப்போது கடத்திவரப்பட்ட தங்கம் நகை வியாபாரத்துக்காக அல்ல. தீவிரவாத நடவடிக்கைகளுக்கு செலவிடுவதற்காக கடத்தி வரப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே கடத்தி வரப்பட்ட தங்கமும் இதே காரணத்துக்காக கடத்தி வரப்பட்டதாக தெரிகிறது. இந்த கடத்தல் நடவடிக்கை இந்தியா - ஐக்கிய அரபுஅமீரக உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதுகுறித்துவிரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in