Published : 15 Jul 2020 08:19 AM
Last Updated : 15 Jul 2020 08:19 AM

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு

புதுடெல்லி

புதுடெல்லி: மேற்குவங்க மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ தேவேந்திரநாத் ராய் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை அக்கட்சி பிரதிநிதிகள் நேற்று சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.

குடியரசுத்தலைவரை சந்தித்த குழுவில் பாஜக பொதுச்செயலர் கைலாஷ் விஜய்வர்கியா, அக்கட்சி எம்பி ராஜு பிஸ்தா, மாநிலங்களவை நியமன உறுப்பினர் ஸ்வபன் தாஸ் குப்தா உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

கடந்த 2016-ல் காங்கிரஸ் ஆதரவுடன் மார்க்சிஸ்ட் சார்பில் வடக்கு தினாஜ்பூர் மாவட்டம் ஹெம்தாபாத் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தேவேந்திரநாத் ராய் கடந்த ஆண்டு பாஜகவுக்கு தாவினார். இந்நிலையில் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அவரது பிந்தால் கிராமத்தில் வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு எதிரில் நேற்றுமுன்தினம் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. ராய் தூக்கிட்டுக்கொண்டதாவும் உடலில் காயங்கள் இல்லை என்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தனது மரணத்துக்கு 2 பேர் காரணம் என ராய் எழுதியிருந்த கடிதம் அவரது சட்டை பாக்கெட்டிலிருந்து கண்டெடுக்கப்படுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x