Published : 14 Jul 2020 05:05 PM
Last Updated : 14 Jul 2020 05:05 PM

கரோனாவுக்கு இந்தியாவில் 2 தடுப்பு மருந்துகள்: எலிக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதனை: ஐசிஎம்ஆர் தகவல்

இந்தியாவில் ஆய்வில் உள்ள 2 கரோனா தடுப்பு மருந்துகள் எலி உள்ளிட்ட விலங்குகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனாவுக்கு 2 தடுப்பு மருந்துகள் தற்போது ஆய்வில் உள்ளன. இது முழுக்க முழுக்க இந்தியாவின் முயற்சியில் நடைபெறுகிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.

கோவாக்ஸின் என்ற பெயரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்து கரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தகக்து.

கிளினிக்கல் ஆய்வுக்கு முந்தைய பரிசோதனைகள் அனைத்தையும் பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு இருக்கிறது எனும் பரிசோதனையும் முடித்துள்ள நிலையில், இரு கட்டங்களாக மனிதர்களுக்கு மருந்தைச் செலுத்தி பரிசோதிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம், ஐசிஎம்ஆர் ஆகியவை அனுமதி வழங்கின.

இதேபோன்று மேலும் ஒரு தடுப்பு மருந்து சோதனை அளவில் உள்ளது. காடில்லா ஹெல்த்கேர் நிறுவனம் ஒரு மருந்தையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த இரண்டு தடுப்பு மருந்துகளுமே முறையான ஆய்வுக்குட்படுத்தி விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்தவதற்கு உரிய அனுமதி பெற்றுள்ளன. மருத்துவ சோதனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி உரிய அனுமதி வழங்கியுள்ளார்.

பல்ராம் பார்கவா

இதுகுறித்து ஐசிஎம்ஆர் நிர்வாகி பல்ராம் பார்கவா கூறியதாவது:

‘‘இந்தியாவில் கரோனாவுக்கு 2 தடுப்பு மருந்துகள் தற்போது ஆய்வில் உள்ளன. எலி உட்பட விலங்குகளுக்கு செலுத்தி இந்த மருந்தின் தன்மை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளன. இதன் அறிக்கையும் அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய அனுமதியும் வழங்கப்பட்டு விட்டது. இதையடுத்து அந்த சோதனையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x