

ராமர் பிறப்பிடமான அயோத்தி நேபாளதில் இருப்பதாகவும் கடவுள் ராமர் ஒரு நேபாளி என்றும் நேபாள் பிரதமர் சர்மா ஒலி கூறியதையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
முதலில் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி, ‘நேபாள் பிரதமருக்கு மனநிலை சரியில்லையோ’ என்று கூறப்போக தற்போது உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, நேபாள் பிரதமரின் மூளை காலியாகிவிட்டதோ என்று சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஹிந்தி மொழியில் செய்த ட்வீட்டில் கூறியிருப்பதன் ஆங்கில வடிவம் வருமாறு: ‘கம்யூனிச பிரதமர் சர்மா ஒலியின் பகவான் ராமர் பற்றிய கூற்று அவரது மூளைக் காலியாகி விட்டதையே காட்டுகிறது.
மேலும் நேபாள் ஒருகாலத்தில் ஆர்யவர்த்தாவின் (இந்தியா) ஒரு பகுதியே என்பதை பிரதமர் ஒலி உணர வேண்டும்’ என்று ட்வீட் செய்துள்ளார்.