Last Updated : 14 Jul, 2020 09:39 AM

 

Published : 14 Jul 2020 09:39 AM
Last Updated : 14 Jul 2020 09:39 AM

நோயாளிகளை அனுமதிக்க மறுப்பு: மருத்துவமனை வளாகத்திலேயே இருவர் மரணம்- கொல்கத்தாவில் அவலம் 

கொல்கத்தாவில் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே 2 நோயாளிகள் மரணமடைந்த விவகாரம் பரபரப்பாகியுள்ளது, மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க மறுத்ததால் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வழக்கம் போல் மருத்துவமனை நிர்வாகம் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

28 வயது டைபாய்ட் காய்ச்சல் நோயாளியை அனுமதிக்க இரண்டு பிற மருத்துமனைகளும் மறுத்தன. இதனையடுத்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அங்கும் மறுப்பு எழுந்துள்ளது, இதனையடுத்து ட்ராலியிலேயே அவர் மரணமடைந்தார்.

இன்னொருவர் வயதான பெண்மணி. இவருக்கு உடல் வலி மற்றும் கால் வீங்கியிருந்தது, இவரும் அனுமதி மறுக்கப்பட்டதால் காரிலேயே மரணமடைந்தார்.

மருத்துவமனை அலட்சியம்தான் காரணம் என்று இரு குடும்பத்தாரும் குற்றம்சாட்டினர்.

ஆனால் கேம்சிஎச் அதிகாரி அலட்சியம் என்ற குற்றச்சாட்டை மறுத்ததோடு இருவருமே வரும்போதே இறந்து விட்டனர் என்றார்.

ஒருவர் அசோக் ருய்தாஸ், இவர் தெற்கு 24 பரக்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு டைபாய்ட், இவருக்கு இரண்டு பிற அரசு மருத்துவமனைகளும் அனுமதிக்க மறுப்பு தெரிவித்ததையடுத்து கேஎம்சிஎச் அழைத்து வரப்பட்டார்.

இது தொடர்பாக மரணமடைந்த ருய்தாஸின் உறவினர் கூறும்போது, “தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 15 நாட்களாக அங்குதான் இருந்தார். அவர் கோவிட்-19 நோயாளி அல்ல, இந்நிலையில் அரசு மருத்துவமனைகள் அவருக்கு அனுமதி மறுத்தன” என்றார்.

கே.எம்.சி.எச் மருத்துவமனையிலும் நீண்ட நேரம் காக்கவைக்கப்பட்டார், அதனால் மருத்துவர்கள் வரும் முன்னரே இறந்து போனார் என்றார். அவர்.

வயதான பெண்மணியும் மருத்துவர்கள் தாமதப்படுத்தியதால் இறந்ததாக அவரது மகள் கண்ணீர் விட்டார்.

கடந்த சனிக்கிழமையன்று 12ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு நீரிழிவு நோயுடன் கோவிட்-19-ம் தாக்கியது. இவர் கேஎம்சிஎச் மருத்துவமனையில் இறந்தார். இவரது மரணத்திற்கும் அலட்சியமே காரணம் என்று குடும்பத்தார் வேதனையுடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x