

குடும்ப வன்முறை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முன்னாள் சட்ட அமைச்சரும் ஆம் ஆத்மி எம்எல்ஏவுமான சோம்நாத் பாரதியை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க விசாரணை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை, கொலைமுயற்சி வழக்குகளை தொடுத்துள்ளார். தலைமறைவாக இருந்த அவரை சரணடையும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை துவாரகா காவல் நிலையத்தில் சோம்நாத் பாரதி சரணடைந்தார்.
இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய துவாரகா வடக்கு காவல் துறையினர், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். இதனை ஏற்ற நீதிமன்றம் 2 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.