கரோனா இறப்பு: குறைவாக உள்ள மாநிலங்கள் எவை?

கரோனா இறப்பு: குறைவாக உள்ள மாநிலங்கள் எவை?
Updated on
1 min read

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் விகிதம் பல மாநிலங்களில் தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது.

கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 3,01,069 பேர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளிலோ, கோவிட் கவனிப்பு மையங்களிலோ, அல்லது வீட்டுத் தனிமைப்படுத்தலிலோ, மருத்துவக் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களை விட குணமடைந்தோர் எண்ணிக்கை 2,51,861 அதிகமாகும். தீவிர நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் தீவிர சிகிச்சையால், இந்தியாவின் இறப்பு விகிதமும் 2.64 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தேசிய கோவிட்-19 தொலை ஆலோசனை மையம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்ந்து பிரத்யேக கோவிட் மருத்துவமனைகளுக்கு உறுதுணையாகச் செயல்பட்டு வருகிறது.

பல மாநிலங்களில் இறப்பு விகிதம் தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. அவை வருமாறு;

இந்தியாவில் 12000 பரிசோதனை ஆய்வகங்கள் என்ற அளவில் பரிசோதனைக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. அரசு ஆய்வகங்கள் - 852, தனியார் ஆய்வகங்கள் - 348. இதன் விவரங்கள்:

• உடனடி RT PCR அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 626 (அரசு: 389 + தனியார்: 237)

• TrueNat அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 474 (அரசு: 428 + தனியார்: 46)

• CBNAAT அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 100 (அரசு: 35 + தனியார்: 65)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in