Published : 13 Jul 2020 07:49 PM
Last Updated : 13 Jul 2020 07:49 PM

கரோனா பாதிப்பு; நாடுமுழுவதும் 5.5 லட்சம் பேர் குணமடைந்தனர்

புதுடெல்லி

நாடுமுழுவதும் கரோனா பாதிப்பில் இருந்து 5.5 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், சிகிச்சை பெற்று வருபவர்களை விட குணமடைந்தோர் எண்ணிக்கை 2.5 லட்சத்துக்கும் அதிகமாகும்.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கோவிட்-19 தொற்று பரவாமல் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் தொடர்ச்சியான தீவிரத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் பலனாக குணமடைந்தோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ,,,,,,,,,,,,,,,,,,

தீவிரமான சோதனைகள் மற்றும் சரியான நேரத்தில் கோவிட் பாதித்த நோயாளிகளைக் கண்டறிவதன் மூலம் அவர்களுக்கு நோய் முற்றுவதற்கு முன்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது; கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரமாக அமல்படுத்துவது, கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆகியவை தொற்று பாதிப்பை கட்டுக்குள் வைத்துள்ளன.

வீடுகளில் தனிமைப்படுத்துதல், ஆக்சிமீட்டர்களைப் பயன்படுத்துதல் ஆகியவை அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறியுள்ள நோயாளிகளுக்கு, மருத்துவமனைக் கட்டமைப்புக்கு சுமை ஏற்படுத்தாமல், விதிமுறைகளின் படி தரமான கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய படிப்படியான கொள்கை மற்றும் முழுமையான அணுகுமுறை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,850 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம், கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,53,470 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x