திருப்பதி பிரம்மோற்சவம்: சூரிய பிரபையில் ஏழுமலையான் பவனி

திருப்பதி பிரம்மோற்சவம்: சூரிய பிரபையில் ஏழுமலையான் பவனி
Updated on
1 min read

திருப்பதி பிரம்மோற்சவ விழா வின் 7-ம் நாளான நேற்று காலை தங்க சூரிய பிரபையில் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, கோபால கிருஷ்ணர் அலங்காரத் தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட வீதிகளில் சுவாமியை தரிசிக்க ஆயிரக்கணக் கான பக்தர்கள் திரண்டிருந்தனர். வாகன சேவையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட் டம் உட்பட பல நடன நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற்றன.

இரவு, சந்திர பிரபையில் உற்சவ மூர்த்தி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித் தார். விழாவின் 8-வது நாளான இன்று காலை உற்சவ மூர்த்திகளின் தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் 11 மணி வரை தேரோட்டம் நடைபெறும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in