கரோனாவுக்கு எதிராக வெற்றிகரமாக போரிடுகிறது இந்தியா: அமைச்சர் அமித் ஷா

கரோனாவுக்கு எதிராக வெற்றிகரமாக போரிடுகிறது இந்தியா: அமைச்சர் அமித் ஷா
Updated on
1 min read

மத்திய ஆயுத போலீஸ் படை நாடு முழுவதிலும் உள்ள தமது முகாம் வளாகங்களில் 1.37 கோடி மரக்கன்றுகளை இந்த மாத இறுதிக்குள் நட முடிவு செய்துள்ளது. அதன் ஒருபகுதியாக குருகிராமில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு ஆயுதப்படை போலீஸ் பிரிவுகளின் தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்கள் மத்தியில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக சமாளித்து வருகிறது. 130 கோடி மக்களைக் கொண்டுள்ள பெரிய நாடு இந்தியா. கூட்டாட்சி முறையை பின்பற்றும் இந்த நாடு எப்படி கரோனா வைரஸை கட்டுப்படுத்தப் போகிறது என்று அச்சத்துடன் பார்த்தன உலக நாடுகள். உலகம் முழுவதிலும் வைரஸுக்கு எதிராக அரசுகள் போராடிவரும் சூழலில் இந்தியாவிலோ ஒவ்வொரு குடிமகனும் அதில் தம்மை இணைத்துக்கொண்டனர். எனவே அச்சப்படும் நிலை இல்லை. கரோனா வைரஸுக்கு எதிரான யுத்தத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஆற்ற வேண்டிய பங்கு நிறைய உள்ளது. கரோனா வைரஸ் தொற்று தடுப்பில் ஈடுபட்டு சுமார் 31 ஆயுதப்படை போலீஸார் உயிரிழந்ததை குறிப்பிட்டாக வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in