Published : 12 Jul 2020 22:36 pm

Updated : 12 Jul 2020 22:36 pm

 

Published : 12 Jul 2020 10:36 PM
Last Updated : 12 Jul 2020 10:36 PM

ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு

30-congress-mlas-and-some-independents-in-the-state-assembly

ஜெய்ப்பூர்

ராஜஸ்தானில் நாளை நடைபெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

அசோக் கெலோட்டின் நடவடிக்கையால் சச்சின் பைலட் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜகவினர் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.


ராஜஸ்தானிலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்வதாகக் குற்றம்சாட்டி முதல்வர் அசோக்கெலாட் 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் தங்கும்விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்.

எனினும் மாநிலங்களவைத் தேர்தல் பிரச்சினை இன்றி நடந்து முடிந்தது. இந்தநிலையில் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயலுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். இந்நிலையில் துணை முதல்வர் சச்சின் பைலட் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளதாக அதிகாரபூர்வ மற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு 19 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் தெரிகிறது. இந்தநிலையில் அசோக் கெலோட்டின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. பாஜக ஆட்சியை கவிழ்க்கும் செயலில் ஈடுபடவில்லை எனவும், காங்கிரஸில் உட்கட்சி மோதல் நடைபெறுவதாகவும் ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் பூனியா விளக்கம் அளித்துள்ளார்.

சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் டெல்லி அருகே குருகிராமில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியானது.

ராஜஸ்தானில் இருந்து சச்சின் பைலட்டுடன் சென்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூர் திரும்பிக் கொண்டிருப்பதாக அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் முதல்வர் அசோக் கெலோட் இன்று ஆலோசனை நடத்தினார். நாளை முழு அளவில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது. ஆனால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என துணை முதல்வர் சச்சின் பைலட் அலுவலக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.

தவறவிடாதீர்!


Congress MLAsIndependents in the state assemblyஜெய்ப்பூர்ராஜஸ்தானில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்புறக்கணிக்க சச்சின் பைலட்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author