

கேரளாவில் கடத்தப்பட்ட தங்கத்தின் நிறம் ‘சிவப்பு’ எனக் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசின் மீது குற்றம்சாட்டிய பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கூட்டணியும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என விமர்சித்துள்ளார்.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் பாஜகவின் அலுவலகத்தை டெல்லியில் இருந்தவாரே காணொலி மூலம் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். மக்களின் ஆதரவு இருப்பதாக இரு கட்சியினரும் கூறிக்கொள்கிறார்கள்.
தென் மாநிலங்களில் பாஜகவால் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு சதவீதத்தை பாஜகஅதிகரி்த்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியும் கூட்டுச் சேர்ந்து செயல்படுகின்றன. கேரள மாநிலத்தில் நிச்சயம் பாஜக தனது கொடியை நிலைநாட்டும்.
ராகுல் காந்தியின் தேசபக்தி என்ன என்பது இந்த மக்களுக்கும், தேசத்துக்கும் தெரியும். டோக்லாம் சிக்கல் இருந்தபோது யாருக்கும்தெரியாமல் சீனத் தூதர்களை சந்தித்தவர்தானே ராகுல் காந்தி. ஆனால், தான் சந்தித்தை வெளியே தெரியாதவரைல் தேச மக்களிடம் தவறான தகவல்களைப் பரப்பினார்.
பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 11 கூட்டத்திலும் பங்கேற்காத ராகுல் காந்தி, ராணுவத்தை சோர்வடையும் வகையில் பேசுகிறார்.
தங்கத்தின் நிறம் மஞ்சளாக இருக்கும் போது, கேரளாவில் மட்டும் கடத்தப்பட்ட தங்கத்தின் நிறம் “சிவப்பு” (மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிறம்) பாக இருக்கிறது. இந்த கடத்தலில் முதல்வர் அலுவலகத்துக்கும் தொடர்பு உள்ளது. அந்த அலுவலகத்தில் பணியாற்றிய செயலாளர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார்.
நிதிமுறைகேட்டில் ஈடுபடுவது, தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்களுக்கு எதிராகச் செயல்படுவது,அரசியலில் வேண்டப்பட்டவர்களுக்கும், உறவினர்களுக்கும் பதவி அளிப்பது போன்றவைதான் பினராயி அரசு செய்து வருகிறது. ஆட்சியை செய்ய திறமையும் இல்லை, ஊழல் மலிந்ததாகவும் இருக்கிறது. வன்முறையில் நம்பிக்கையுடயதாக பினராயி விஜயன் அரசு இருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடத்தப்பட்ட அரசியல் வன்முறையில் இதுவரை 270க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் 20 ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளார்கள். கரோனா வைரஸ் பரவலை முறையாகக் கையாளாத கேரள அரசு, பாதிப்பு விவரங்களையும், உயிரிழப்புகளையும் மறைத்து, தவறான விவரங்களை அளிக்கிறது. மருத்துவ வல்லுநர்கள் அளித்த எந்த ஆலோசனையையும் கேட்கவில்லை.
கரோனா வைரஸ் பரவிய காலத்தில் கூட முதல்வர் பினராயி விஜயனஅ அரசியல் செய்தார்.வந்தேபாரத் மிஷன் மூலம் கேரளாவைச் சேர்ந்த 1.21லட்சம் மக்களை சொந்த மாநிலத்துக்கு மத்திய அரசை அழைத்து வந்துள்ளது.
ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்கு எந்தவிதமான தடையும் இதுவரை செய்யவில்லை. ரயில்வே உள்கட்டமைப்புக்கு ரூ.2 லட்சம் கோடி, தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு ரூ.64 ஆயிரம் கோடி, கொச்சி துறைமுகம் எழுப்ப ரூ.3,400 கோடி வழங்கியுள்ளது மத்திய அரசு.
பிரதமர் மோடி, கேரள மக்களுடன் உணர்வுரீதியாக தொடர்பு உடையவர். வளைகுடா நாடுகளுக்கு சென்றபோது கேரள மக்கள் பிரதமர் மோடி அன்புடன் வரவேற்றார்கள்.
இவ்வாறு ஜெ.பி. நட்டா தெரிவித்தார்