Published : 12 Jul 2020 06:54 AM
Last Updated : 12 Jul 2020 06:54 AM

ரவுடி விகாஸ் துபேவின் அரசியல் தொடர்புகள் குறித்து எஸ்ஐடி விசாரணைக்கு உ.பி. அரசு உத்தரவு மகாராஷ்டிராவில் பதுங்கியிருந்த முக்கிய கூட்டாளிகள் 2 பேர் கைது

கான்பூர் அருகே போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விகாஸ் துபே, உத்தர பிரதேசத்தில் மிகக் குறுகிய காலத்துக் குள் ரவுடி சாம்ராஜ்யம் அமைத்தது எப்படி, அவருக்கு இருந்த அரசியல் தொடர்புகள் உள்ளிட்டவை குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அம்மாநில அரசு அமைத் துள்ளது.

மகாராஷ்டிராவில் பதுங்கியிருந்த விகாஸின் 2 முக்கிய கூட்டாளிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள மிகச் சிறிய கிராமமான பிக்ருவை சேர்ந்தவர் விகாஸ் துபே. பிரபல ரவுடியாக இருந்த இவர் மீது 60-க்கும் மேற்பட்ட கொலை, ஆள் கடத்தல் வழக்கு உள்ளது. சமீபத்தில் கான்பூரில் நடந்த ஒரு கொலை சம்பவத்தில் விகாஸ் துபேவுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. இதன்பேரில், அவரை கைது செய்வதற்காக டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா தலைமையிலான போலீஸார் கடந்த 2-ம் தேதி பிக்ரு கிராமத்துக்கு சென்றனர்.

போலீஸார் வருவதை முன்கூட்டியே அறிந்துகொண்ட விகாஸும், அவரது கூட்டாளிகளும் கிராமத்தின் பல பகுதிகளில் பதுங்கியிருந்து போலீஸார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா உட்பட 8 போலீஸார் உயிரிழந்தனர். போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் 2 ரவுடிகள் பலியாயினர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தப்பியோடி தலைமறைவான விகாஸ் துபேவை பிடிப்பதற்காக உத்தர பிரதேசம், டெல்லி, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், போலீஸாரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு மத்திய பிரதேச மாநிலத்துக்கு விகாஸ் தப்பிச் சென்றார். அங்கு உஜ்ஜைன் நகரில் உள்ள மகா காலபைரவர் கோயிலுக்கு சென்றபோது, விகாஸை மத்திய பிரதேச போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, பல்வேறு பகுதிகளில் சிக்கிய விகாஸின் கூட்டாளிகள் 5-க்கும் மேற்பட்டோர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பொய்த்து போன எதிர்பார்ப்பு

கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபேயிடம் முறையாக விசாரணை நடத்தினால் அவருக்கு பக்கபலமாக இருந்த அரசியல் பிரமுகர்கள் யார், அவர்களுக்காக விகாஸ் செய்த குற்றங்கள் என்ன என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளிவரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உஜ்ஜைனில் இருந்து கான்பூருக்கு கொண்டு வரும் வழியில், போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக கூறி விகாஸ் துபே நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட் டார். அவரை சுட்டுக் கொன்றதற்காக போலீஸாருக்கு ஒருபுறம் பாராட்டு கள் குவிந்து வந்தாலும், மறுபுறம் விகாஸுக்கு ஆதரவாக இருந்த அர சியல் கட்சியினரை பாதுகாப்பதற்கா கவே அவர் கொல்லப்பட்டதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபே, ஒட்டுமொத்த உத்தர பிரதேசத் தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத் திருந்ததாக கூறப்படுகிறது. ரியல் எஸ் டேட் தொடங்கி எந்தத் தொழில் செய்ய வேண்டும் என்றாலும் விகாஸின் அனு மதி இல்லாமல் எதுவும் நடக்காது என்ற சூழலே அங்கு நிலவி வந்துள்ளது. பல் வேறு வழக்குகளில் தொடர்பு இருந் தாலும், அவரை கைது செய்ய காவல்துறையினர் பல ஆண்டுகளாக தயக்கம் காட்டி வந்துள்ளனர். போலீஸா ருக்கு சிம்ம சொப்பனமாக விகாஸ் துபே விளங்கி வந்திருக்கிறார். அதே நேரத்தில் பல போலீஸார், விகாஸுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, அவருக்கு பல தகவல்களை தெரிவித்து வந்துள்ளனர்.

மேலும், பல்வேறு அரசியல் கட்சி களைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளும் இவருக்கு ஆதரவாக இருந்து வந்துள் ளனர். இந்தியா மட்டுமின்றி மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளி லும் விகாஸுக்கு பெரிய அளவில் தொடர்புகள் இருந்திருக்கின்றன. அங் கும் ஏராளமான சொத்துகளை அவர் வாங்கிக் குவித்துள்ளதாக கூறப்படு கிறது.

உத்தர பிரதேசத்தில் மிகக் குறுகிய காலத்துக்குள் விகாஸ் துபே, மிகப் பெரிய ரவுடி சாம்ராஜ்யம் அமைத்தது எப்படி, அவருக்கு இருந்த அரசியல் செல்வாக்கு, பிக்ரு கிராமத்தில் 8 போலீஸாரை அவரால் எவ்வாறு கொல்ல முடிந்தது, 60-க்கும் மேற்பட்ட தனிப்படைகளின் தேடுதல் வேட்டைக்கு நடுவே உத்தர பிரதேசத்தில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு அவர் தப்பிச் சென்றது எப்படி என்பன உள்ளிட்ட ஏராளமான கேள்விகளுக்கு இப்போது வரை விடை தெரியாமல் இருக்கிறது.

இந்த விஷயங்கள் குறித்து விசா ரணை நடத்துவதற்காக எஸ்ஐடி குழு ஒன்றை உத்தர பிரதேச அரசு அமைத் துள்ளது. ஒரு ஐஏஎஸ் அதிகாரி மற்றும் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு, உட னடியாக தனது விசாரணையை தொடங் கும் என உ.பி. உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசா ரணை அறிக்கையை ஜூலை 31-ம் தேதிக்குள் மாநில அரசிடம் இக்குழு சமர்ப்பிக்கும் என கூறப்படுகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக் கும் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய கூட்டாளிகள் கைது

ரவுடி விகாஸ் துபேவின் முக்கிய கூட்டாளிகள் மகாராஷ்டிராவில் பதுங்கி யிருப்பதாக அம்மாநில தீவிரவாத தடுப் புப் படையினருக்கு (ஏடிஎஸ்) தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில், ஆய்வாளர் தயா நாயக் தலைமையிலான ஏடிஎஸ் படையினர் தானே மாவட்டத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட னர். அப்போது அங்கிருந்த ஒரு வீட்டில் பதுங்கியிருந்த குட்டன் ராம்விலாஸ் திரிவேதி (46), சுஷில் குமார் (30) ஆகி யோரை ஏடிஎஸ் படையினர் கைது செய்தனர். பிக்ருவில் 8 போலீஸார் கொல் லப்பட்ட வழக்கில் இவர்கள் முக்கிய குற்றவாளிகள் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இருவரிடமும் விசா ரணை நடத்திய ஏடிஎஸ் அதிகாரிகள், உ.பி. போலீஸாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x