

கேரளாவில் அன்னாசி பழத்தில் மறைத்து வைத்திருந்த வெடி மருந்து வெடித்ததில் யானை உயிரிழந்தது தொடர்பாக மத்திய அரசு, கேரளா மற்றும் 12 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் கடந்த மே மாதம் கருவுற்ற யானை ஒன்று அன்னாசி பழத்தை சாப் பிட்டபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து வெடித்தது. இதில் அந்த யானை யின் தாடை வெடித்து படுகாய மடைந்தது. படுகாயங்களுடன் சுற்றி வந்த யானை, அப்பகுதியில் இருந்த ஆற்றில் இறங்கி தண்ணீரில் நின்றபடியே உயிரி ழந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி யது. அரசியல் கட்சியினரும் விலங்குகள் நல ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 14, 21 ஆகியவை ஒவ்வொரு உயிருக்கும் கண் ணியத்துடன் வாழும் உரிமையை அளிக்கின்றன. ஆனால் வெடிபொருட்களை வைத்து மிருகங்களை கொல்வது அரசிய லமைப்பு சட்டத்தை மீறும் செயல் என்று நீதிபதிகள் கண்டித்தனர்.
மேலும் ‘மிருகவதை தடுப்பு சட்டம் 1960 ஐ இன்னும் பலப்படுத்தி, மிருகங்களுக்கு எதிராக கொடூர குற்றங்களை செய்வோருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக மத்திய அரசு, கேரளா மற்றும் 12 மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்’ என நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பாலக்காட்டில் யானை உயிரி ழந்த சம்பவம் உணர்வுப்பூர்வமான விஷயமாக மாறியிருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இது போன்ற செய்திகளை பத்திரிகை களும், ஊடகங்களும் மிகுந்த கவனத்துடன் கையாள உத்தர விட வேண்டும் என்றும் கோரப் பட்டுள்ளது.