பாதுகாப்பு தொழில்நுட்பத் துறை ஒத்துழைப்பு: தென்கொரியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்ய திட்டம்

தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் மற்றும் பிரதமர் மோடி: கோப்புப் படம்
தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் மற்றும் பிரதமர் மோடி: கோப்புப் படம்
Updated on
1 min read

பாதுகாப்பு தொழில்நுட்பத் துறை ஒத்துழைப்பு தொடர்பாக தென்கொரியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளது..

கொரிய நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடினார்
பாதுகாப்பு அமைச்சர் .ராஜ்நாத் சிங், கொரிய நாட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு.ஜியோங் கியோங்–டூ-வுடன் தொலைபேசியில் இன்று உரையாடினார்.

கோவிட்-19 பெருந்தொற்று சூழலால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து இரண்டு அமைச்சர்களும் விவாதித்தனர். கோவிட்-19-க்கு எதிரான சர்வதேச செயல்பாடுகளில் இந்தியாவின் பங்களிப்புக் குறித்து ராஜ்நாத் சிங், ஜியோங் கியோங்– டூ-விடம் எடுத்துரைத்தார்.

இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான உலக அளவிலான போரில், இருதரப்பு ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள சிக்கலான சவால்களைச் சமாளிக்க, இணைந்து பணியாற்றுவதற்கு அமைச்சர்கள் இருவரும் ஒப்புக் கொண்டனர்.

தொலைபேசி உரையாடலின்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த அமைச்சர்கள், ஆயுதப்படைகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு செயல்பாடுகளை மேலும் மேம்படுத்துவது என உறுதிபூண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு தொழில் துறை மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத் துறை ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in