Published : 10 Jul 2020 03:05 PM
Last Updated : 10 Jul 2020 03:05 PM

கரோனா நேயாளிகள் குணமடைவது 63 சதவீதமாக உயர்வு: ஹர்ஷ வர்த்தன் தகவல்

இந்தியாவில் அதிகமான நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுவதால் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, அதேசமயம் குணமடைவோர் எண்ணிக்கை 63 சதவீதமாக உயர்ந்துள்ளதால் மக்கள் கவலைப்படத் தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் இதுகுறித்து கூறியதாவது:
கரோனா பாதிப்பை பொறுத்வரையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், குஜராத் ஆகிய 8 மாநிலங்களில் மட்டுமே சுமார் 90 சத தொற்றுள்ளவர்கள் உள்ளனர்.

அதேபோன்று 49 மாவட்டங்களில் மட்டுமே 80 சத தொற்றுள்ளவர்கள் உள்ளனர். இதுவரை ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 6 மாநிலங்களில் (மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், மற்றும் மேற்குவங்கம்) ஏற்பட்ட மொத்த இறப்பு 86 சதம் ஆகும். மொத்த இறப்புகளில் 80 சத இறப்பு 32 மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளது.

தொற்றுள்ளோரில் இறப்பு ஏற்படும் விகிதம் அதிகம் உள்ள பிராந்தியங்களில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

இந்தியாவில் அதிகமான நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுவதால் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, அதேசமயம் குணமடைவோர் எண்ணிக்கை 63 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகமானோர் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.72 சதவீதமாக உள்ளது. எனவே மக்கள் கவலைப்படத் தேவையில்லை.

அந்தந்த பகுதிகளில் சில இடங்களில் கரோனா தீவிரமாக பரவி வருகிறது. ஆனால் இது உள்ளூர் அளவில் தான் உள்ளது. ஆனால் நாடுதழுவிய அளவில் இது சமூக பரவல் எனக் கூற முடியாது

இவ்வாறு அவர் கூறினார்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x