Published : 10 Jul 2020 13:23 pm

Updated : 10 Jul 2020 13:23 pm

 

Published : 10 Jul 2020 01:23 PM
Last Updated : 10 Jul 2020 01:23 PM

சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத எரிசக்திக்கான உலகச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்

india-most-attractive-global-market-for-clean-energy-modi
பிரதமர் மோடி காணொலியில் பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ

ரீவா

சுற்றச்சூழலுக்கு மாசில்லாத எரிசக்திக்கான உலகச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்தார்

மத்தியப் பிரதேச மாநிலம், ரீவா பகுதியில் 750 மெகா வாட் திறனில் சூரியமின் சக்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறே காணொலி மூலம் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் இதுவாகும்.

மத்தியப் பிரதேச அரசின் ரீவா அல்ட்ரா மெகா சோலார் லிமிட், சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளன. 500 ஏக்கரில்அமைந்துள்ள 750 மெகா வாட் சூரிய மின் திட்டத்தால், 15லட்சம் டன் கார்பன் எரிவாயு வெளியேறுவது தடுக்கப்படும்.

இந்த மின்திட்டத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 24 சதவீதம் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகமும், மீதமுள்ள 76 சதவீதம் மத்தியப்பிரதேச அரசு மின்பகிர்பான நிலையங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

ரீவா மின்சக்தி திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் ஆளுநர் ஆனந்திபென் படேல், மத்திய அமைச்சர்கள் ஆர்.கே. சிங், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

இந்த சூரிய மின்திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்த பிரதமர் மோடி பேசியதாவது:

சூரிய மின்சக்தி உறுதியானது, சுத்தமானது பாதுகாப்பானது. உலகளவில் அதிக அளவில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் முதல் 5 நாட்களில் இந்தியா இருந்து வருகிறது.

சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத எரிசக்திக்கான உலகச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது மத்தியப்பிரதேச அரசு வருங்காலத்தில் சூழலுக்கு கேடில்லாத எரிசக்தியை குறைந்தவிலையில் வழங்கும் மையமாக விளங்கும்.

இந்த சூரிய மின்சக்தி திட்டத்திலிருந்து கிடக்கும் மின்சாரம் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு மட்டும் பயன் அளிக்கப்போவதில்லை, டெல்லி மெட்ரோ ரயில்நிலையத்துக்கும் வழங்கப்பட உள்ளது.

தற்சார்பு பொருளாதாரத்தின் முக்கிய நோக்கத்தில் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடைவதாகும். தற்சார்பு பொருளாதாரம் எனும் இலக்கை அடைய சூரிய மின்சக்தி முக்கியப் பங்காற்றும்.
பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தலாமா அல்லது சுற்றுச்சூழல் மேம்பாட்டில் கவனம் செலுத்தலாமா என உலக நாடுகள் ஊசலாட்டத்தில் இருக்கின்றன. சூரிய மின்சக்தி உற்தியானது,

சுத்தமானது, பாதுகாப்பானது. ஏனென்றால், உலகம் முழுவதும் சூரியன் தனது கதிர்களை பரப்பி வருகிறது. பாதுகாப்பானது ஏனென்றால் சூழலுக்கு எந்தவிதமான கேடையும் சூரியமின்சக்தி ஏற்படுத்தாது.
ரீவா புதிய வரலாற்றை படைத்துள்ளது. நர்மதை நதி, வெள்ளைப்புலியின் பெயரைத் தாங்கியுள்ளது ரீவா. தற்போது ஆசியாவின் மிகப்பெரிய சூரியமின்சக்தி திட்டமாக இது மாறியுள்ளது

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

India most attractive global marketClean energyPrime Minister Narendra Modi750 MW solar project in RewaMadhya PradeshClean and cheap powerபிரதமர் மோடி750 மெகாவாட் சூரிய மின்திட்டம்மத்தியப்பிரதேசம்ரீவா மின்திட்டம்750 மெவாட் மின்தி்ட்டம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author