

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு 30 கிலோ தங்கம் கடத்தப் பட்ட விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. திருவனந்த புரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலில் கடந்த 5-ம் தேதி சுங்கத் துறையினர் இந்த தங்கத்தை கைப்பற்றினர். தூதரகத் துக்கு என வழங்கப்படும் சலுகையை கடத்தலுக்கு பயன்படுத்தி இருப்பது நாட்டில் இதுவே முறையாகும்.
இந்த முறைகேட்டில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறு வனத்தில் பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் முக்கிய குற்றவாளியாக கருதப் படுகிறார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படும் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் எம்.சிவ சங்கர், அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராயி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தூதரக பொருட்களில் பெருமளவு தங்கத்தை மறைத்துவைத்து கடத்த முயன்றது மிகவும் தீவிரமான குற்ற மாகும். இதுகுறித்து சுங்கத் துறையினர் விசாரணை நடத்துவதாக தெரிகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த சம்பவத்தில் பல்வேறு கோணங்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து மத்திய அமைப்புகளும் திறன்வாய்ந்த மற்றும் ஒருங்கிணைந்த விசாரணை மேற்கொள்வது அவசியம். தொடக்கம் முதல் இறுதிவரை விசா ரித்து, இதில் உள்ள அனைத்து தொடர் புகளையும் கண்டறிய வேண்டும்.
மத்திய அமைப்புகளின் விசா ரணைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒத்துழைப்பையும் மாநில அரசு வழங்கும். எனவே, குற்றச்செயல் குறித்து திறன்வாய்ந்த மற்றும் ஒருங்கிணைந்த விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கடிதத் தில் பிரனாயி விஜயன் கூறியுள்ளார்.
கேரள பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான முரளீதரன் நேற்று கூறும்போது, ‘‘கடத்தலில் தொடர் புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணியில் மத்திய அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இந்தக் கடத்தலில் தனது அரசுக்கு எந் தத் தொடர்பும் இல்லை என பினராயி விஜயன் கூறுகிறார். அவர் அவ்வாறு கைகழுவிவிட முடியாது. முதல்வரின் நம்பிக்கைக்குரிய உயரதிகாரி ஒருவர் குற்றவாளியுடன் நெருங்கிய தொடர் பில் இருந்தது மிகவும் வியப்பளிக் கிறது” என்றார்.