

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள வங்கி களில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்கக் கோரி, வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், லீக்டென்ஸ்டைன் நாட்டில் உள்ள 26 வங்கிக் கணக்கு விவரங்களை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எச்.எல்.தத்து, ரஞ்சனா தேசாய், மதன் லோகுர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, “கறுப்புப் பணத்தை மீட்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசு அந்த உத்தரவை அமல்படுத்த வில்லை,” என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து சிறப்பு புலனாய் வுக் குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா, துணைத் தலைவ ராக அரிஜித் பசாயத் ஆகி யோரை நியமித்து நீதிபதிகள் உத்தர விட்டனர். இதற்கான நடவடிக்கை களை, அதிகபட்சம் 3 வாரங் களுக்குள் மத்திய அரசு மேற் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜெர்மனி அரசிடம் இருந்து பெறப்பட்ட இந்தியர் களுக்குச் சொந்தமான 26 கணக்கு விவரங்களை மனுதாரர் ராம்ஜெத்மலானிக்கு மூன்று நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.