

உ.பி.யின் முக்கிய ரவுடி விகாஸ் துபே மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள மஹாகாலபைரவன் கோயிலில் கைது செய்யப்பட்டார். இவரது தலைக்கு அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சம் பரிசு அக்கோயிலின் காவலருக்கு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கான்பூரில் 8 போலீஸாரை சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிய விகாஸ் துபே உபி போலீஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்தார். இதற்கு உதவியாக டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் ம.பி போலீஸாரும் இருந்தனர்.
இந்நிலையில், எவரும் எதிர்பாராதபடி விகாஸ் துபே இன்று காலை உஜ்ஜைன் நகரின் பிரபல மஹாகாலபைரவர் கோயிலுக்கு வந்துள்ளார். இவரை அக்கோயிலின் காவலரான லக்கன் யாதவ், எந்த ஆயுதங்களும் இன்றி வெறும் கைகளால் மடக்கிப் பிடித்து மபி போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இது குறித்து லக்கன் யாதவ் கூறும்போது, ‘இன்று காலை சுமார் 7.00 மணி அளவில் கோயிலின் பின்புற வாயிலில் நுழைந்தார் விகாஸ் யாதவ். அவரது கைகளில் கோயிலின் விவிஐபி கட்டண அனுமதிச் சீட்டு இருந்துள்ளது.
அவரது முகத்தை பலமுறை நான் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்து வருவதால் விகாஸாக இருக்கும் என சந்தேகம் எழுந்தது. இதை கோயிலின் மற்ற அதிகாரிகளிடம் தெரிவித்தேன். பிறகு வழக்கமாக கோயிலுக்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வருவோரிடம் கேட்கும் கேளிவிகளை எழுப்பினேன்.’ எனத் தெரியவில்லை.’ எனத் தெரிவித்தார்.
பிறகு கோயிலுக்கு வெளியே விகாஸை தொடாமலும் அழைத்துச் சென்ற காவலர் லக்கன் யாதவ் உஜ்ஜைன் காவல்துறையின் சோதனைச்சாவடியில் ஒப்படைத்துள்ளார். அப்போது தனது சீருடையில் இருந்த லக்கனிடம் எந்தவிதமான ஆயுதங்களும் இல்லை.
எனவே, உபி போலீஸார் அறிவித்தபடி விகாஸ் தலைக்கான ரூ.5 லட்சம் பரிசு அவரை முதன்முறையாக கண்டறிந்த லக்கன் யாதவிற்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதற்கு முன்னதாக, அக்கோயிலின் வாசலில் கோபால் என்ற பண்டிதர் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகித்துக் கொண்டிருந்தார்.
அவரிடம் முதலில் வந்த விகாஸ் தன் கைப்பை மற்றும் காலனிகளை எங்கு வைப்பது? எனக் கேட்டிருக்கிறார். அப்போது அதற்கான இடத்தையும் சுட்டிக் காட்டியவருக்கு அவர்தான் விகாஸ் துபே என்பது தாமதமாகத் தெரிந்துள்ளது