விகாஸ் துபே வழக்கில் உ.பி. போலீஸ் அதிரடி: இருவேறு இடங்களில் மேலும் 2 சகாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

விகாஸ் துபே வழக்கில் உ.பி. போலீஸ் அதிரடி: இருவேறு இடங்களில் மேலும் 2 சகாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
Updated on
1 min read

உ.பி.யின் ரவுடி விகாஸ் துபே வழக்கில் உபி போலீஸார் நடவடிக்கை அதிரடியாகத் தொடர்கிறது. இவரது கும்பலில் மேலும் 2 சகாக்கள் இருவேறு இடங்களில் கைதாகி தப்பிச்ச் செல்லும் போது நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கான்பூரின் பிக்ரு கிராமத்தில் தன்னை பிடிக்க வந்த போலீஸ் படையில் 8 பேரை சுட்டுக் கொன்ற விகாஸ் துபே தலைமறைவாக உள்ளார். இவரது தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவித்த கான்பூர் போலீஸார் பல்வேறு மாநிலங்களில் தேடி வருகிறது.

இதில், கடந்த இரண்டு நாட்களாக உ.பி போலீஸாரின் நடவடிக்கை அதிரடியாகத் தொடர்கிறது. டெல்லி நீதிமன்றத்தில் சரணாக முயலும் விகாஸ் துபே, அதன் எல்லையில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார்.

இங்கு போலீஸார் சேர்வதற்கு சில நிமிடங்களில் விகாஸ் தப்பினார். எனினும், அங்கிருந்த விகாஸ் கும்பலை சேர்ந்த பிரஷாந்த் மிஸ்ரா என்றழைக்கப்படும் கார்த்திகேய மிஸ்ரா, ஸ்ரவண் மற்றும் அங்கூர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் நேற்று ஹரியானா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில், ஸ்ரவண் மற்றும் அங்கூருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிரஷாந்த் மிஸ்ராவை மட்டும் உபி போலீஸார் ’டிரான்ஸிட் ரிமாண்ட்’ மூலம் கான்பூர் அழைத்து வந்தனர்.

அப்போது நேற்று இரவு வழியில், உ.பி அதிரடிப் படையின் ஆய்வாளரின் துப்பாக்கியை பிடுங்கி தப்பி ஓடி முயன்றுள்ளார் பிரபாத். இதனால், அவரை பிடிக்கும் முயற்சியில் உபி அதிரடிப் படை பிரபாத்தை சுட்டுக் கொன்றுள்ளது.

அதேசமயம், விகாஸ் துபே கும்பலை சேர்ந்த மற்றொருவரான பவண் சுக்லா என்றழைக்கப்படும் ரண்பீர் சுக்லா கான்பூரின் அருகிலுள்ள ஏட்டாவில் ஒளிந்திருந்தார். நேற்று இரவு உபி

அதிரடிப் படையினருடன் அங்கு சென்ற கான்பூர் போலீஸார் ரண்பீரை சுற்றி வளைத்தனர்.

இதில், போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டவர் மீது உபி அடிரடிப் படையினர் திருப்பி சுட்டதில் ரண்வீர் கொல்லப்பட்டார். ரண்வீர் மற்றும் பிரஷாந்த் மிஸ்ரா ஆகிய இருவருமே ஜூன் 2 நள்ளிரவு கான்பூரில் 8 போலீஸார் பலிக்கு காரணமான துப்பாக்கி சூட்டில் இடம் பெற்றவர்கள்.

இவர்களுடன் சேர்த்து விகாஸ் துபே கும்பலின் 3 பேர் உபி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதுவன்றி, ஷியாமூ வாஜ்பாய், ஜஹான் யாதவ் மற்றும் சஞ்சு துபே ஆகியோர் கான்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஷியாமூ வாஜ்பாய் போலீஸாரிடம் சிக்காமல் தப்பி ஓட முயன்றார். இதனால், அவரது காலில் சுட்டு ஷியாமூ உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in