Published : 08 Jul 2020 09:08 PM
Last Updated : 08 Jul 2020 09:08 PM

கேரளாவில் இன்று 301 பேருக்கு கரோனா தொற்று: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

திருவனந்தபுரம் 

கேரளாவில் இன்று புதிதாக 301 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை:

''கேரளாவில் இன்று புதிதாக 301 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று கண்டறியப்பட்ட நோய்த் தொற்றுகளில் 99 பேர் வெளிநாடுகளில் இருந்து மாநிலத்திற்குள் வந்தவர்கள். 95 பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 90 பேர் உள்ளூர்க்காரர்கள் ஆவர்.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் 64 பேர், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 46 பேர், திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் தலா 25 பேர், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 பேர், இடுக்கி மாவட்டத்தில் 20 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் 18 பேர், கோட்டயம் மாவட்டத்தில் 17 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 16 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 15 பேர், வயநாடு மாவட்டத்தில் 14 பேர், கொல்லம் மாவட்டத்தில் 8 பேர், பத்தனம்திட்டாவிலில் 7 பேர் மற்றும் காசர்கோடு மாவட்டத்தில் 4 பேர் கரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து 99 பேரின் நாடு வாரியான பட்டியல் சவுதி அரேபியா - 34 பேர், ஐக்கிய அரபு எமிரேட் - 24 பேர், குவைத் - 19 பேர், கத்தார் - 13 பேர், ஓமன் - 6 பேர், பஹ்ரைன் - 2 பேர் மற்றும் கஜகஸ்தான் -1. கர்நாடகா- 25 பேர், தமிழ்நாடு -21 பேர், மேற்கு வங்கம் -16 பேர், மகாராஷ்டிரா -12 பேர், டெல்லி -11 பேர், தெலங்கானா -3 பேர், குஜராத்- 3 பேர், சத்தீஸ்கர்-2 பேர், அசாம்-1 மற்றும் ஜம்மு & காஷ்மீர்- 1.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் 60 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 7 பேர், கோழிக்கோட்டில் இருந்து 5 பேர், ஆலப்புழாவில் 3 பேர், பத்தனம்திட்டா மற்றும் கோட்டயம் மாவட்டங்களைச் சேர்ந்த தலா இரண்டு பேர் மற்றும் கொல்லம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் தலா இரண்டு பேர் தொடர்பு மூலம் கரோனா பாதிக்கப்பட்டவர்கள்.

கோட்டயம் மாவட்டத்தில் இரண்டு மற்றும் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என மூன்று சுகாதாரப் பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர, திருச்சூர் மாவட்டத்தில் ஒன்பது பேர் பி.எஸ்.எஃப் பணியாளர்கள், கண்ணூர் மாவட்டத்தில் ஒரு சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர், மற்றும் பாதுகாப்பு சேவை கேண்டீன் தொழிலாளி மற்றும் ஆலப்புழா மாவட்டத்தில் மூன்று பேர் ஐ.டி.பி.பி பணியாளர்கள் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேரும், ஆலப்புழா மாவட்டத்தில் 16 பேரும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 13 பேரும், திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் தலா 11 பேரும், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது பேரும், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு மாவட்டத்தில் தலா 7 பேரும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் இருந்து ஆறு பேரும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் மூன்று பேரும் இன்று நடந்த சோதனையில் கரோனா தொற்று நோயிலிருந்து விடுபட்டவர்கள் ஆவர். இதுவரை, 3,561 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 2,605 நோயாளிகள் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது மொத்தம் 1,85,546 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,82,409 பேர் தங்கள் வீடுகளில் அல்லது நிறுவன தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கண்காணிப்பில் உள்ளனர். 3,137 பேர் மருத்துவமனைகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். 421 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், சோதனைகளுக்கான எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தவிர கடந்த 24 மணி நேரத்தில் 11,250 மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. மொத்தம் 2,96,183 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 4,754 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. கூடுதலாக, சென்டினல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக, அதிக ஆபத்துள்ள முன்னுரிமை குழுக்களிடமிருந்து 65,101 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மேலும் 60,898 மாதிரிகள் எதிர்மறையாக இருந்தன.

பட்டியலில் இருந்து நான்கு இடங்கள் விலக்கப்பட்டிருந்தாலும், 12 புதிய இடங்கள் இன்று ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டன. கேரளாவில் தற்போது 169 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன''.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x