Published : 08 Jul 2020 07:45 PM
Last Updated : 08 Jul 2020 07:45 PM

கோவிட்-19 நோயாளிகள் குணமடையும் விகிதம் 61.53 சதவீதமாக உயர்வு

நாடுமுழுவதும் கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கை விட சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமாகும்.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கரோனாவை கண்டறியும் பரிசோதனை மாதிரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,62,679 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் 53,000 தனியார் சோதனைச் சாலைகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதனையும் சேர்த்து தேசிய அளவில் கோவிட்-19 தொற்றுக்காக பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் மொத்தம் 1,04,73,771 ஆகும். 10 லட்சத்திற்கு 7180 என்ற விகிதத்தில் சோதனைகளின் எண்ணிக்கை உள்ளது.

தற்போது 1119 கோவிட்-19 பரிசோதனைச் சாலைகள் நமது நாட்டில் உள்ளன. இதில் அரசு பரிசோதனைச் சாலைகள் 795, தனியார் பரிசோதனைச் சாலைகள் 324.

· நிகழ்நேர பிசிஆர் (Real Time – RT PCR) அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 600 (அரசு : 372 + தனியார் : 228 ),

· ட்ரூனேட் (TrueNat) அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 426 (அரசு : 390 + தனியார் : 36)

· CBNAAT அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 93 (அரசு : 33 + தனியார் : 60) ஆகும்.

மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் கோவிட்-19 நோயாளிகள் குணமடையும் விகிதம் 61.53 சதவீதத்தை இன்று எட்டியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, கொவிட்-19 தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையை விட 1,91,886 அதிகமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 16,883 கொவிட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர். இது வரை 4,56,830 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது 2,64,944 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x