கரோனா ஊரடங்கால் விமானங்கள் ரத்து: டிக்கெட் கட்டணத்தை திருப்பித் தரக் கோரி வழக்கு

கரோனா ஊரடங்கால் விமானங்கள் ரத்து: டிக்கெட் கட்டணத்தை திருப்பித் தரக் கோரி வழக்கு

Published on

கரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அந்த விமானங்களில் செல்ல பயணிகள் பதிவு செய்த டிக்கெட் கட்டணத்தை முழுமையாக திருப்பித்தர உத்தரவிடுமாறு இந்திய விமானப் பயணிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

இந்த மனு தொடர்பாக மத்திய அரசுக்கும் இதர தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷண் கவுல்,எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று உத்தரவிட்டது. மேலும் இந்த நீதிமன்றத்தில் இதே கோரிக்கை தொடர்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த மனுவையும் சேர்த்து உத்தரவிட்டனர்.

விமானப் பயணத்துக்காக முன்பதிவு செய்த பயணிகள் ஊரடங்கு காரணமாக டிக்கெட்டை ரத்து செய்ததால் அவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பித்தர உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in