உ.பி.யில் கரோனா பரிசோதனை கூடங்கள்: மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை  நடவடிக்கை

உ.பி.யில் கரோனா பரிசோதனை கூடங்கள்: மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை  நடவடிக்கை
Updated on
1 min read

உத்தர பிரதேசத்தில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில் கரோனா பரிசோதனை கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான, பீர்பால் சஹ்னி பேலியோசயின்சஸ் நிறுவனம் (பிஎஸ்ஐபி), கரோனா தொற்றை உத்தரப்பிரதேசத்தில் கட்டுப்படுத்துவதற்கு அம்மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

லக்னோவில் உள்ள 5 மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்ஐபி கரோனா மாதிரிகளை பரிசோதிப்பதற்கான பரிசோதனைச் சாலையை அமைப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்த நிறுவனத்தில் ஏற்கனவே உள்ள டிஎன்ஏ பிஎஸ்எல்-2ஏ பரிசோதனைச்சாலை கரோனா க்கான பரிசோதனைகளை மேற்கொள்ள உதவியது.

இந்த ஆண்டு மே 2-ந் தேதியன்று, கரோனா மாதிரிகளின் முதல் அணியை, சந்தவ்லி மாவட்டத்திலிருந்து பிஎஸ்ஐபி பெற்றுக் கொண்டது. அன்று முதல் இந்தப் பரிசோதனைச்சாலை 24 மணி நேரமும் பணியாற்றி, நாளொன்றுக்கு 400 மாதிரிகளை பரிசோதித்து வருகிறது. இன்று வரை 12,000 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 400-க்கும் கூடுதலானவை கரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளவையாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in