Published : 07 Jul 2020 06:35 AM
Last Updated : 07 Jul 2020 06:35 AM

இந்தியாவில் கரோனா பரிசோதனை ஒரு கோடியை கடந்தது; தடுப்பு மருந்து அறிமுகத்துக்கு காலக்கெடு விதிக்கவில்லை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்

புதுடெல்லி

இந்தியாவில் ஒரு கோடி பேருக் கும் அதிகமாக கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ள தாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித் துள்ளது. தடுப்பு மருந்தை அறி முகம் செய்ய காலக்கெடு எதுவும் விதிக்கவில்லை என்றும் ஐசிஎம்ஆர் விளக்கம் அளித் துள்ளது.

இந்தியாவில் கரோனா வைர ஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கி யுள்ளது. கரோனா வைரஸ் பாதிக் கப்பட்டோரை கண்டறிய பரிசோத னைகளை அரசு தீவிரப்படுத்தி யுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 80,596 பேருக்கு சோதனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இதை யடுத்து, இதுவரை செய்யப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது.

இதுதொடர்பாக, ஐசிஎம்ஆர் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘கடந்த 14 நாட்களில், சராசரியாக 2.15 லட்சம் (2,15,655), சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த 5 நாட்களில் 10 லட்சம் மாதிரிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 1 கோடியே 4,101 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன’’ என்றார். சோதனைத் திறனை அதி கரிக்கும் முயற்சியாக பொது மற்றும் தனியார் துறை இரண்டி லும் 1,105 ஆய்வகங்களுக்கு ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள் ளது. இதன்மூலம் பரிசோதனை திறன் ஒரு நாளைக்கு 3 லட்சத் துக்குமேல் அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸை எதிர் கொள்ளும் வழிமுறைகள் குறித்த ஐசிஎம்ஆரின் சமீபத்திய வழிகாட்டு அறிக்கையில், ‘கரோனாவுக்கான அளவீட்டு சோதனைக்கு தேவை யான நடவடிக்கைகளை எடுக்கு மாறு அனைத்து மாநில அரசுகள், பொது மற்றும் தனியார் நிறு வனங்களுக்கு ஐசிஎம்ஆர் அறி வுறுத்துகிறது.

தொற்று பரவாமல் தடுப்பதற் கும் உயிர்களை காப்பாற்றுவதற் கும் ஒரே வழி சோதனை, தடமறி தல் மற்றும் சிகிச்சை மட்டுமே என்பதால், இது கட்டாயமாகும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அனைத்து அறிகுறி நபர் களுக்கும் சோதனை பரவலாக கிடைக்க வேண்டும். மேலும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்து வதற்கான தொடர்புத் தடமறிதல் வழிமுறைகள் மேலும் பலப்படுத் தப்பட வேண்டும்’ என்று கூறப் பட்டுள்ளது.

தவறாக புரிந்து கொள்ளப்பட்டது

இதனிடையே, கரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியா வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து விரைவில் ஆய்வக பரிசோதனையை முடிக்க வேண் டும் எனவும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தடுப்பு மருந்தை அறி முகம் செய்ய வேண்டும் எனவும் காலக்கெடு விதித்து ஐசிஎம்ஆர் நெருக்கடி கொடுப்பதாக செய்தி கள் வெளியானது. இதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று நிபுணர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை அறிமுகம் செய்ய ஐசிஎம்ஆர் காலக்கெடு எதையும் விதிக்கவில்லை என்றும் பரி சோதனை நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறியது தவறாக புரிந்து கொள் ளப்பட்டதாகவும் ஐசிஎம்ஆர் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தடுப்பு மருந்துகளுக்கான முயற்சி யில் 6 இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் 2021-ம் ஆண்டுக்கு முன்னதாக தடுப்பு மருந்து அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் மத்திய அறிவியல் அமைச்சகம் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x