Published : 07 Jul 2020 06:32 AM
Last Updated : 07 Jul 2020 06:32 AM

உ.பி.யில் 8 போலீஸார் சுட்டுக் கொலை; ரவுடி விகாஸ் துபேவின் தலைக்கு 2.5 லட்சம் பரிசு- மாநில கூடுதல் போலீஸ் டிஜிபி அறிவிப்பு

உத்தர பிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீஸாரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி விகாஸ் துபேவின் தலைக்கு ரூ.2.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் கான்பூா் மாவட்டத்தில் உள்ள பிக்ரு கிரா மத்தில் 4 நாட்களுக்கு முன்பு டிஎஸ்பி, எஸ்ஐக்கள் உட்பட 8 போலீஸாரை ரவுடி விகாஸ் துபே தலைமையிலான கும்பல் சுட்டுக் கொன்றது. இதையடுத்து கும்பலைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் விகாஸ் துபேவின் வீடு இடிக்கப்பட்டது. உத்தர பிரதேசம் மட்டுமல்லாமல் ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநிலங்களிலும் விகாஸ் துபே கும்பலை போலீ ஸார் தேடி வருகின்றனர்.

இதனிடையே விகாஸ் துபே தலைக்கு ரூ.2.5 லட்சம் பரிசை போலீஸார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து உ.பி. மாநில கூடுதல் போலீஸ் டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) பிரசாந்த் குமார் கூறியதாவது:

விகாஸ் துபேவின் தலைக்கு ஏற்கெனவே பரிசு அறிவிக்கப்பட் டிருந்தது. இந்நிலையில் அந்த பரிசுத் தொகை ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விகாஸ் துபே புகைப்படம் அடங்கிய போஸ் டர்கள், பதாகைகளை மாநிலம் முழுவதும் ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியா-நேபாள எல்லைப் பகுதி யிலும் விகாஸ் துபேவின் புகைப் படம் அடங்கிய போஸ்டர் ஒட்டப் பட்டுள்ளது. போலீஸாரை சுட்டுக் கொன்ற தினத்தில், விகாஸ் துபேவுக்கு 4 போலீஸார் உதவி யுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட் டுள்ளனர். இவ்வாறு தெரிவித் துள்ளார்.

இதனிடையே, சம்பவத்தை நேரில் பார்த்த போலீஸ் அதிகாரி கவுசலேந்திர பிரதாப் சிங் கூறியதாவது:

சம்பவத்தன்று சவுபேபூர் போலீஸ் நிலையத்தில் இருந்து 3-வது போலீஸ் படை ஒன்று அங்கு விரைந்தது. தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள போலீஸ் அதி காரி வினய் திவாரி தலைமை யிலான அந்தப் படை, ரவுடிகள் துப்பாக்கியால் போலீஸாரை சுட்டபோது, எதையும் செய்யாமல் நின்றுகொண்டிருந்தனர். இதை நான் நேரில் பார்த்தேன்.

சவுபேபூர் போலீஸ் நிலை யத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே பிக்ரு கிராமம் குறித்து தெரியும். ஆனால், அவர்கள் விகாஸ் துபே வுக்கு உதவும் வகையில், பதில் தாக்குதல் நடத்தாமல் இருந்தனர். ரவுடிகள் சுட்டதில் 8 போலீஸார் இறந்தனர். எனக்கு துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டு மருத் துவமனையில் சேர்க்கப்பட்டேன். நேற்றுதான் நினைவு திரும்பியது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x