Last Updated : 06 Jul, 2020 10:09 AM

 

Published : 06 Jul 2020 10:09 AM
Last Updated : 06 Jul 2020 10:09 AM

பிஎம்கேர்ஸ் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை;தரம் குறைந்த வென்டிலேட்டர்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

பி.எம்.கேர்ஸ் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை. தரம்குறைந்த வென்டிலேட்டர்கள் வாங்கியதால், இந்திய மக்களின் உயிர் பெரும் இடருக்கு ஆளாகியுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கும் வகையில் மத்திய அரசு பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையை உருவாக்கியது. ஏற்கெனவே பிரதமர் நிவாரண நிதி இருக்கும் போது இந்த அறக்கட்டளை தேவையில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன

இதற்கிடையே பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.2ஆயிரம் கோடி மதிப்பில் கரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த வென்டிலேட்டர்களில் பல தரம் குறைந்ததாக இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில் “ பி.எம்.கேர்ஸ் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை. 1. இந்தியர்கள் வாழ்வு பெரும் இடருக்குள்ளாகியுள்ளது 2. பொது மக்கள் பணத்தைப் பயன்படுத்தி தரம்குறைந்த பொருட்கள் வாங்கப்படுகின்றன” எனக் குற்றம்சாட்டியுள்ளார்

மேலும், தரம்குறைந்த வென்டிலேட்டர்கள் வாங்கப்பட்டதாகக் கூறி ஒரு இணையதளம் வெளியிட்ட செய்தியின் லிங்கையும் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பாஜகஃபெயில்ஸ்கரோனாபைட் எனும் ஹேஸ்டேக்கையும் ராகுல் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மத்திய அரசு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வென்டிலேட்டர்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருக்கிறது.

50 ஆயிரம் வென்டிலேட்டர் வாங்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. ஜூன் 23ம்தேதிவரை 1,340 வென்டிலேட்டர்கள் மட்டுமே டெலிவரி செய்யப்பட்டுள்ளன.

இதுவரை வென்டிலேட்டர் தயாரிப்புக்கு எந்தவிதமான வெளிப்படையான டெண்டரும் கோரவில்லை. தரம்குறைந்த வென்டிலேட்டர் ரூ.1.50 லட்சத்துக்கு டெண்டரில் குறிப்பிடப்பட்ட நிலையில் ரூ.4 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லபா நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் “ மார்ச் 31-ம் ேததி அறிவிப்பின்படி 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் ஜூன்22-ம் தேதிவரை 1,340 வென்டிலேட்டர்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன. லாக்டவுன் காலத்தை சரியாக மத்திய அ ரசு பயன்படுத்தாமல், மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த தவறியதால், கரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மத்திய அரசு 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வாங்கப்படும் என்று கூறிய நிலையில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா 60 ஆயிரம் வென்டிலேட்டர்கள் ஜூன் மாத இறுதிக்குள் வாங்கப்படும் என்றார்.

வென்டிலேட்டர் வாங்குவதில் குழப்பமும், தாமதமும் ஏற்பட்டுள்ளது. பிஎம் கேர்ஸ் நிதியை கையாள்வதில் வெளிப்படைத்தன்மையும், முறைகேடும் நடந்து, தரம்குறைந்த வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ. 4 லட்சம் மதிப்பில் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வாங்கப்படும் என்று மத்திய அரசு குறிப்பிட்டநிலையில் அ ரசுக்கு ரூ.1.50 லட்சத்தில்தான் வென்டிலேட்டர்களை நிறுவனங்கள் சப்ளை செய்துள்ளன.

பிஎம்கேர்ஸ் நிதி எங்கே போனது, வென்டேலட்டர்களை வாங்குவதில் ஏன் தாமதம்? வெளிப்படையாக டெண்டர் ஏன் மத்திய அ ரசு கோரவில்லை, வெளிப்படைத்தன்மை ஏன் இல்லை. தரம் குறைந்த பொருட்களை வாங்கி, மக்களின் உடல்நலத்தில் ஏன் மத்திய அரசு சமரசம் செய்கிறது

இவ்வாறு வல்லவா கேள்வி எழுப்பியுள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x