இந்திய படைவீரர்களின் மன உறுதி மிக அதிகம்: ஐடிபிபி இயக்குநர் தேஸ்வால் நம்பிக்கை

இந்திய படைவீரர்களின் மன உறுதி மிக அதிகம்: ஐடிபிபி இயக்குநர் தேஸ்வால் நம்பிக்கை
Updated on
1 min read

டெல்லியில் கரோனா நோயாளிகளுக்காக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை நிர்வகிக்கும் பொறுப்பு இந்தோ திபெத் எல்லைப் படையிடம் (ஐடிபிபி) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற ஐடிபிபி இயக்குநர் எஸ்.எஸ்.தேஸ்வால் கூறியதாவது:

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாட்டிலேயே முதன் முதலில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தல் மையத்தை டெல்லியின் சாவ்லா பகுதியில் ஐடிபிபி நிறுவியது. இதில் ஐடிபிபியின் மருத்துவர்கள் குழு ஏராளமானோருக்கு சிகிச்சை வழங்கியது. இதுபோல கிரேட்டர் நொய்டா பகுதியில் மத்திய ஆயுத காவல் படை மருத்துவமனையில் போலீஸாருக்கு இக்குழு சிகிச்சை வழங்கியது. இதனால் அனுபவம் பெற்ற ஐடிபிபி மருத்துவக் குழுஇந்த பிரம்மாண்ட மருத்துவமனையில் சிகிச்சை வழங்கும்.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் லடாக் சென்று, நிமு நகரில் வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அதன் பிறகு எல்லையில் உள்ள அனைத்து படை வீரர்களின் மன உறுதியும் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் ஏராளமான ராணுவ வீரர்கள் பணியில் இருந்தபோது நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். இதுபோல, வருங்காலத்திலும் வீரர்கள் அனைவரும் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்ய தயாராக உள்ளனர்.

இந்திய ராணுவம், விமானப் படை, ஐடிபிபி உள்ளிட்ட அனைத்துபடைகளின் மன உறுதியும் மிகவும் அதிகம் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in